Breaking News

தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை தமிழகத்தில் வெளியிடக்கூடாது உளவுத்துறை அறிக்கை

அட்மின் மீடியா
0

இஸ்லாமிய பெண்களை மையமாக வைத்து 'தி கேரளா ஸ்டோரி' என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ள திரைப்படம் தமிழ், மலையாளம் உள்ளிட்ட 5 மொழிகளில் நாளை மறுநாள் 5-ந்தேதி வெளியாகிறது.



இந்த படத்தில் கேரளாவை சேர்ந்த பெண்கள் மதம் மாறி பயங்கரவாத அமைப்புகளில் சேருவது போன்று காட்சிகள் இடம் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதில் நர்சாக இருக்கும் ஒரு கேரள இந்து பெண் முஸ்லிம் மதத்துக்கு மாறி பின்னர் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேருவது போன்றும், பின்னர் ஆப்கானிஸ்தான் சிறையில் அடைக்கப்படுவது போன்றும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து 'தி கேரளா ஸ்டோரி' படத்துக்கு  கேரள முதல்வரான பினராயி விஜயன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கேரள மாநிலத்தின் மாண்பை குலைக்கும் வகையில் திரைப்படம் எடுக்கப்பட்டு உள்ளதாக அவர் கூறி இருக்கிறார். இதனால் கேரள மாநிலத்தில் 'தி கேரள ஸ்டோரி' திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் இந்த படத்தை திரையிட்டால் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மாநில உளவுதுறையினர் தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பி இருக்கிறார்கள் தமிழ்நாட்டில் படத்தை வெளியிட்டால் தியேட்டர்கள் முன்பு முஸ்லிம் அமைப்பினர் போராட்டம் நடத்த வாய்ப்பு உள்ளது. எனவே தமிழ்நாட்டில் அந்த படத்தை திரையிடாமல் இருந்தால் நல்லது என உளவுத்துறை அறிக்கை என தகவல் வெளியாகி உள்ளது மேலும் தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தை தமிழகத்தில் வெளியிட யாரும் இதுவரை முன்வரவில்லை இதனால் படத்தை தயாரிப்பாளரே வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. கேரள ஸ்டோரி படத்திற்க்கு தமிழக அரசு ஆலோசித்து முடிவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Tags: தமிழக செய்திகள் மார்க்க செய்தி

Give Us Your Feedback