Breaking News

போக்குவரத்து விதிமீறலா ? இனி ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது - தமிழக அரசின்புதிய நடைமுறைகள் முழு விவரம்

அட்மின் மீடியா
0

தமிழ்நாட்டில் சாலைப் போக்குவரத்தை கண்காணித்து, விபத்துகளை தவிர்க்கும் வகையில் புதிய திட்டம்.தமிழகம் முழுவதும் முழுவதும் உள்ள சாலைகளில், போக்குவரத்தை கண்காணிக்க நவீன கேமராக்கள் அமைக்க புதிய திட்டத்தை அறிவித்துள்ளது 

அதன்படி தேசியநெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலைகள், முக்கிய நகரங்களில் நவீன கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேலும் போக்குவரத்து காவலர்கள் தங்கள் உடலில் கேமராவை பொருத்தி போக்குவரத்தை கண்காணிக்க வேண்டும். 

விதிமீறும் வாகனங்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கு 15 நாட்களுக்குள்ளாக கட்டுப்பாட்டு அறையில் இருந்தவாறே அபராதம் விதிக்க புதிய நடைமுறை விதிக்கப்பட்டுள்ளது. தேதி, நேரம், இடம் ஆகியவற்றுடன் மின்னஞ்சல் அல்லது குறுந்தகவல் அல்லது நேரில் வழங்கப்படும் அபராதச் சீட்டைப் பெற்றுக்கொண்டு இணையதளத்திலோ அல்லது போக்குவரத்து காவல் நிலையங்களிலோ அபராதம் செலுத்திக் கொள்ளலாம்.என தெரிவித்துள்ளது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback