Breaking News

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இதில் இளநிலை படிப்புகளுக்காக மொத்தம் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 395 இடங்கள் காலியாக உள்ளன. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்ப பதிவு கடந்த 8ம் தேதி தொடங்கி இன்றுடன் நிறைவடைய இருந்தது. 

இந்நிலையில் அரசு கலை அறிவியல் கல்லூரியில் விண்ணப்பம் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வருகிற மே 22 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர ஆன்லைன் மூலம் மே 8 ம்தேதி முதல் 19 ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

மாணவர்களின் தரவரிசை பட்டியல் மே 23க்குள் கல்லூரிகளுக்கு அனுப்பப்படும்.மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட சிறப்பு பிரிவுகளுக்கான கலந்தாய்வு கல்லூரி அளவில் மே 25-29 வரை நடத்தப்படும்.

அரசு கலைக் கல்லூரிகளில் சேர முதல்கட்ட பொது கலந்தாய்வு மே30 முதல் ஜூன் 9 வரை நடைபெறும். இரண்டாம் கட்ட பொது கலந்தாய்வு ஜூன் 12 முதல் 20 வரை நடைபெறும். 


விண்ணப்பிக்க:-

www.tngasa.in

www.tngasa.org 

என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். மேலும் ஆன்லைனில் விண்ணப்பிக்க 22.05.2023 கடைசி நாளாகும் 

விண்ணப்பக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் இணையதள வாயிலாக செலுத்தலாம். 

ணையதள வாயிலாகக் கட்டணம் செலுத்த இயலாத மாணவர்கள் கல்லூரி சேர்க்கை உதவி மையங்களில் ‘The Director, Directorate of Collegiate Education, Chennai - 6” என்ற பெயரில் வங்கி வரைவோலை அல்லது நேரடியாகவும் செலுத்தலாம். 

மேலும், இது குறித்த தகவலுக்கு 044 - 28260098 / 28271911 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது,

Tags: கல்வி செய்திகள்

Give Us Your Feedback