7 ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகிறது வானிலை ஆய்வு மையம்..!
வங்கக்கடலில் ஏப்ரல் மே 6 அல்லது 7ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது
தென்கிழக்கு வங்கக்கடலில் மே 7ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்றும் இது தாழ்வு மண்டலமாக வலுவடைந்து வடக்கில் நகர்ந்து மத்திய வங்க கடல் பகுதியில் புயலாக வரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் புயலின் தன்மை நகர்வு திசை ஆகியவை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் இது குறித்த தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில் நேற்று கடலோர மாவட்ட ஆட்சியர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வங்கக் கடலில் புயல் உருவானால் மேற்கொள்ளக் கூடிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் போதே பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்வது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டன. தற்போது முதலே ஒடிஷாவின் அனைத்து கடலோர மாவட்டங்களும் உஷார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டிருக்கிறது.
Tags: தமிழக செய்திகள்