Breaking News

ராஜஸ்தானில் ஹஜ் பயணிகள் மீது தாக்குதல் பேருந்து மீது கல்வீச்சு வீடியோ 6 பேர் கைது முழு விவரம் rajasthan haj bus attack

அட்மின் மீடியா
0

ராஜஸ்தானின் உள்ள கோட்டா மாவட்டத்தில் ஹஜ் யாத்ரீகர்கள் சென்ற பேருந்து மீது கல்வீச்சு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 பேரை கைது செய்தனர். 

ராஜஸ்தானின் கோட்டா மாவட்டத்தில் உள்ள குன்ஹாடி பகுதியில் ஹஜ் யாத்ரீகர்கள் 24 ம் தேதி இரவு ஜெய்பூர் விமானநிலையம் செல்லும் போது அவர்கள் சென்ற பேருந்தை நிறுத்தி அவர்களை தாக்கி பேருந்து மீது கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளார்கள் இந்த கல்வீச்சு தாக்குதலில் பலர்  காயமடைந்தனர்.

முதலில் பேருந்தை நிறுத்தி பின்னர் யாத்ரீகர்கள் மீது தாக்குதல் நடத்தினர். பயணிகளை தாக்கியதோடு, பஸ்சையும் சேதப்படுத்தினர்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட அனைவரும் முஸ்லிம்கள் என்பதைக் கண்டறிந்ததும், அவர்கள் அவர்களைத் தாக்கத் தொடங்குகிறார்கள்

இதற்கிடையில், காவல்துறையினர் தாக்குதல் குறித்து விசாரணையைத் தொடங்கி இந்த வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுத்த போலீசார் குற்றவாளிகள் 6 பேரை கைது செய்துள்ளனர். 

போலிசார் விசாரனையில் குற்றவாளிகள் பைக்கில் சென்று கொண்டு இருக்கும் போது பஸ் டிரைவர் அவர்களுகு முந்தி செல்ல வழிவிடாமல் சென்றுள்ளார் எனவும் இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் முன்னே சென்று பஸ்சை நிறுத்தி கற்களை வீசி தாக்கினார். இதையடுத்து, டிரைவரையும் தாக்கினார்கள் என தெரியவந்தது அவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் மற்றும் நாசவேலை. அரசாங்கச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தது. உட்பட பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

ஹஜ் சென்ற பயணிகள் பேருந்துகள் மீது கல் வீச்சு சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

வீடியோ பார்க்க:-

https://twitter.com/mabrookalsaari/status/1661784668520468486

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback