Breaking News

வங்கிகளில் இன்று முதல் ரூ2000 நோட்டுக்களை மாற்றிக் கொள்ளலாம்!!

அட்மின் மீடியா
0

இந்தியாவில் 2016 டிசம்பரில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையாக அப்போதைய ரூ500 , 1000 ரூ நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டன. அந்த சமயத்தில் புதிதாக ரூ.2000 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டது 

இந்நிலையில் செப்டம்பர் 30 ம்தேதி முதல் 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என ரிசர்வ் வங்கி 19 ம் தேதி அறிவித்தது,

மேலும் இன்று முதல் செப்டம்பர் 30 தேதி வரை வங்கிகளில் ரூ.2000 நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் எனவும் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ரூ. 20,000 வரை அதாவது 10 நோட்டுகள் வரை மாற்றி கொள்ளலாம் எனவும் 

கோடைக்காலம் என்பதால் பொதுமக்கள் காத்திருக்க நிழலான இடம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும், வாடிக்கையாளர்களுக்கு குடிநீர் வசதிகள் செய்துதரப்பட வேண்டும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். 

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback