Breaking News

பஸ் ரயில் மெட்ரோ ரயில் அனைத்திற்க்கும் ஒரே QR டிக்கெட் சட்டப்பேரவையில் அறிவிப்பு முழு விவரம்

அட்மின் மீடியா
0

பொதுமக்கள் ஒரே பயணச்சீட்டின் மூலம் பொது போக்குவரத்தான மாநகர பேருந்துகள், சென்னை மெட்ரோ ரயில் , புறநகர் ரயில் என அனைத்திலும் பயணிக்கும் வசதி 

மாநகரப் பேருந்தில் பயணிக்க மாநகர் போக்குவரத்து கழகத்தால் சீசன் டிக்கெட் வழங்கப்படுகிறது. அதேபோல், மெட்ரோ ரயிலில் பயணிக்க பயணிகளுக்கு பயண அட்டை வழங்கப்படுகிறது. மேலும் புறநகர் ரயிலில் பயணிக்க குறிப்பிட்ட இடத்தில் இருந்து குறிப்பிட்ட இடத்திற்கு பயணிக்க சீசன் டிக்கெட் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சென்னையில் மாநகரப்பேருந்து, புறநகர் ரயில் மற்றும் மெட்ரோ ரயில் என அனைத்து வித போக்குவரத்திற்கும் இனி ஒரேவித டிக்கெட் முறையாக இ-டிக்கெட் எனும் புதிய வசதி அறிமுகம்

ஒரே டிக்கெட்டில் இதனை பெறும் படியான QR பயணசீட்டு முறைக்காக, சம்பந்தப்பட்ட துறைகளுடன் கலந்தாலோசித்து இதற்கான செயலி உருவாக்கப்படும் என்றும், இந்த திட்டத்திற்கான மதிப்பீடாக ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது.





Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback