Breaking News

ரேஷன் கார்டு தபால் மூலம் வீடு தேடி வரும் விண்ணப்பிப்பது எப்படி முழு விவரம் How to get Smart Ration Card by post

அட்மின் மீடியா
0

புதிய மின்னணு குடும்ப அட்டைகளை அவர்களின் இருப்பிடத்திற்கு தபால் மூலம் அனுப்பி வைக்க அரசாணை வெளியிடப்பட்டது. மேலும் தபால் கட்டணத்தை பயனாளிகளிடம் வசூல் செய்து குடும்ப அட்டைதாரர்கள் முகவரிக்கு அனுப்ப அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் புதிய மின்ணனு குடும்ப அட்டைகளை அஞ்சல் வழியாக பெற விருப்பம் தெரிவிக்கும் வசதி இணையதளத்தில் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. 


அஞ்சல் வழியாக புதிய மின்னணு குடும்ப அட்டைகள் பயனாளிகளின் இருப்பிடத்திற்கே அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று சட்டப் பேரவையில் அமைச்சா் சக்கரபாணி அறிவித்திருந்தார். 

இந்நிலையில், இத்திட்டத்திற்கான கட்டணம் மற்றும் வழிமுறைகள் குறித்து கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை அரசாணை வெளியிட்டுள்ளது. புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்கும்போது, விண்ணப்பதாரா் புதிய மிண்னனு குடும்ப அட்டையை தபால் மூலம் பெற விரும்புகிறாரா? அல்லது நேரில் பெற விரும்புகிறாரா? என விண்ணப்பிக்கும் போது விருப்பம் தெரிவிப்பதற்காக இணையதளத்தில் கேட்கப்படும் தபாலில் பெறுவதற்கான கட்டணம் ரூ. 25ஐ இணையவழியில் செலுத்துமாறு, விண்ணப்பதாரருக்கு குறுந்தகவல் மூலமாகத் தெரிவிக்கப்படும். 

குடும்ப அட்டை நகலை தபாலில் பெற விரும்புவோருக்கு, இணையவழியில் விண்ணப்பிக்கும்போதே, இணையவழி அட்டை கட்டணம் ரூ. 20 மற்றும் தபால் கட்டணம் ரூ. 25 என ரூ. 45 கட்டணமாக வசூலிக்கப்படும் எனவும் மேலும் தபால் மூலமாக புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை பெற விரும்பாதவா்களுக்கு தற்போதைய நடைமுறைப்படி குடும்ப அட்டை தொடா்ந்து வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல் குடும்ப அட்டை தொலைந்து போனாலோ அல்லது திருத்தம் செய்து இருந்தாலோ இணையத்தில் விண்ணப்பித்து, அட்டையை பெற தாலுக்கா அலுவலகம் செல்ல வேண்டி இருந்தது.இந்நிலையில், தபால் மூலமாக பெறும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது. 

புதிய அட்டை பெற இணையத்தில் மூலம் விண்ணப்பித்து அதற்கான தொகையை ஆண்லைன் மூலம் செலுத்தினால் புதிய அட்டைகளை வீட்டிற்கே தபால் மூலமாக பெற்றுக்கொள்ளும் வசதி தற்போது உருவாக்கப்பட்டுள்ளது.

நம்மில் பலரும் ஸ்மார்ட் ரேசன் கார்டினை தொலைத்து இருப்போம் அல்லது குடும்ப உறுப்பினர் பெயர் சேர்த்து இருப்போம். அவர்களுக்கு புதிய ஸ்மார்ட் ரேசன் கார்டினை அரசு அளிக்காமால் இருந்தது ஆனால் தற்போது அந்த கவலையை போக்க அரசு தொலைந்த அல்லது மாற்றம் செய்த கார்டிற்க்கு புதிய ஸ்மார்ட் ரேசன் கார்ட் விண்ணப்பிக்கலாம் எனவும் அதுவும் நேரில் செல்லாமல் அஞ்சல் மூலம் பெறலாம் எனவும் அறிவித்துள்ளது

 
ஆன்லைனில் நீங்கள் விண்ணப்பிப்பது எப்படி:-
 
முதலில் தமிழக அரசின்  உணவுத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல https://tnpds.gov.in/ இங்கு கிளிக் செய்யுங்கள்
 
அதில் நகல் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பம் என்ற லிங்கை கிளிக் செய்யுங்கள்
 
நீங்கள் ரேசன் கடையில் கொடுத்த மொபைல் எண்ணை பதிவிட்டு கீழ் உள்ள கேப்சாவை பதிவிடுங்கள் 
 
அடுத்து உங்கள் மொபைலுக்கு வரும் ஒடிபி எண்னை பதிவிட்டு உள் நுழையவும்

அடுத்து வரும் பக்கத்தில் உங்களுக்கு தெளிவான வழிகாட்டிதல் இருக்கும் அதனை கவனமாக படித்து பாருங்கள்

அடுத்து பணம் செலுத்து என்பதை கிளிக் செய்து ரூபாய் 45 ஆன்லைன் மூலம் பணம் செலுத்துங்கள்

அடுத்து நகல் அட்டை விண்ணப்பிக்க என்பதை கிளிக் செய்து  அதில் நகல் அட்டைக்கான காரணத்தை உள்ளிட்டு பணம் செலுத்திய டிரான்ஷக்சன் விவரம் கொடுத்து சப்மிட் கொடுங்கள் அவ்வளவுதான்

தேவையான விவரங்கள்:-

குடும்ப அட்டை தலைவரின் பெயர் 

குடும்ப அட்டை எண் (12 இலக்க எண்) 

குடும்ப அட்டையில் பதிவு செய்யப்பட்டுள்ள கைபேசி எண் 

மாவட்டம் 

தொகை (ரூபாய்) 

பணம் செலுத்துபவரின் சுய விவரம் : 

பணம் செலுத்தியவரின் பெயர் 

பிறந்த தேதி 

கைபேசி எண்

மின் அஞ்சல் முகவரி ( E-mail id) 

செலுத்தப்பட வேண்டிய தொகை ரூ.45/- (குடும்ப அட்டை அச்சிட ரூ.20/- அஞ்சல் வழி அனுப்ப மற்றும் இதர செலவுகள் – ரூ.25/- 


tnpds ration card

smart ration card

smart card download

tnpds online

tnpds smart card

apply new ration card online tamilnadu

new ration card apply online tamilnadu

tamilnadu ration card apply online

tn smart card

npds ration card download

how to apply ration card online in tamilnadu

Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback