Breaking News

FACT CHECK ரமலான் தொழுகையில் பூனை வந்த இமாம் மரணம் என பரவும் செய்தி உண்மையா? sheikh walid mehsus died fake

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்   கடந்த மாதம் ரமலான் தராவீஹ் தொழுகையில் பூனை ஒன்று இமாம் அவரது தோளின் மேல் ஏறி அவருக்கு முத்தமிட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியது நினைவிருக்கலாம். பார்வையற்ற அந்த இமாமான *ஷேய்க் அப்துல்லாஹ் கமால்* அவர்கள் நேற்று(வியாழன்) இறைவனிடம் மீண்டு விட்டார்கள்.*"இன்னாலில்லாஹ் வ இன்னா இலைஹி ராஜுவூன்".* அல்லாஹ் அவரை பொருந்திக்கொண்டு சுவனத்தில் உயர்ந்த அந்தஸ்தை வழங்குவானாக! என்று  ஒரு செய்தியை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 




அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?

உண்மை என்ன? 

பலரும் ஷேர் செய்யும் அந்த செய்தி குறித்து நமது அட்மின் மீடியா உண்மை தன்மை கண்டறியும் குழு ஆராய்ந்தது, அதன் முடிவில் பலரும் ஷேர் செய்யும் அந்த செய்தி பொய்யானது என அட்மின் மீடியா உண்மை தன்மை கண்டறியும் குழு கண்டறிந்தது 

முழு விவரம்:-

அல்ஜீரியாவில் உள்ள போர்ட்ஜ் அரேரஜ் நகரில் உள்ள பள்ளிவாசலில் இமாம் க்ஷேக் வாலித் மெக்சாஸ்  இரவு நேர தராவீஹ் தொழுகை நடத்திக்கொண்டிருந்தார். ரமலான் காலம் என்பதால் அந்த தொழுகை நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

தொழுகையின் போது பூனை ஒன்று திடீரென இமாம் மீது ஏறி அவரிடம் குறும்பு செய்தது.கிட்டத்தட்ட ஒரு நிமிட நேரம் குறும்பு செய்தது பூனை இடையூறு செய்தாலும் இமாம் தமது கடமையை சரியாகச் செய்தார்,அவர் பூனையை விரட்டாமல் அரவணைக்கிறார். அதேநேரத்தில் வழிபாட்டையும் நிறுத்தவில்லை.தொழுகைக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க இமாம் ஒரு கையால் பூனையைப் பாதுகாக்கிறார். 

மேலும் பூனைக்குட்டியை கூட செல்லமாக தடவி கொடுக்கின்றார் அந்த பூனை இமாமுக்கு கன்னத்தில் முத்தம் கொடுக்கின்றது வீடியோவின் முடிவில், பூனை மீண்டும் தரையில் குதிக்கிறது.

பூனையிடம் அவர் அன்பாக இருந்ததையும் கண்டு சமூக ஊடகங்களில் மக்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.அந்த வீடியோ இப்போது வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இந்த வீடியோ முஸ்லிமல்லாதவர்களிடமும் மிகப்பெரும் வைரலாக மாறி உலகின் பல முன்னனி செய்தி நிறுவனங்கள் இதை ஒளிபரப்பியது. அனைத்து நாடுகளிலும் இச்செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது.

அல்ஜீரிய அரசின் மத விவகாரத்துறை அமைச்சகம் அந்த இமாமை அழைத்து அரசு சார்பாக கௌரவித்திருக்கிறது. இஸ்லாம் விலங்குகளிடமும் இரக்கத்துடன் நடப்பதை எந்தளவுக்கு வரவேற்கிறது என்பதை இமாம் அவர்களின் இந்த நடவடிக்கை மூலமாக உலகச் செய்தியாக மாற்றியதற்கு மகிழ்ச்சி தெரிவித்தது. வீடியோ பார்க்க:- https://twitter.com/Gerashchenko_en/status/1644279303658504198

இந்த நிலையில் அந்த இமாம் இறந்து விட்டார் என பலர் ஓர் செய்தியை தவறாக ஷேர் செய்து வருகின்றார்கள்

பலரும் ஷேர் செய்யும் இமாம் இறந்தது எகிப்தின் புகழ்பெற்ற பார்வையற்ற  இஸ்லாமிய அறிஞர் ஷேக் அப்துல்லா கமில் ஆவார் 

அவர் அமெரிக்காவில் உள்ள அல்-தவ்ஹீத் மசூதியில் இமாமத் செய்யும் போது இந்த மரணமடைந்தார் அவர் இறந்த அந்த செய்தியை சிலர் தவறாக புரிந்து கொண்டு அல்ஜீரிய அந்த பூனை இமாம் இறந்துவிட்டதாக பதிவிட்டு வருகின்றார்கள் 

பூனை இமாம் பெயர் :- sheikh walid mehsus

இறந்த இமாம் பெயர்:- sheikh abdullāh kāmil

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்



Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback