Breaking News

தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமர் மோடியிடம் அளித்த ஸ்டாலின் முழு விவரம்

அட்மின் மீடியா
0

 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களை சந்தித்து, தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார்.

                                                      

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (8.4.2023) சென்னை விமான நிலையத்தில், மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களை சந்தித்து, தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார். அதன் விவரங்கள் வருமாறு:-

1. திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை சென்னை மெட்ரோ இரயில் திட்டம்

2. தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை 

1. விமான நிலைய விரிவாக்கத்திற்கான பாதுகாப்புத்துறை நிலங்களை இலவசமாக வழங்குதல் 

2. காலணி உற்பத்திக்கான புதிய உற்பத்தி சார்ந்த ஊக்கச் சலுகை திட்டம் (PLI) 

3. பி.எம். மித்ரா பூங்காவின் முதன்மை மேம்பாட்டாளராக 

3. சிப்காட்டினை நியமித்தல் இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை (அ)தமிழ்நாட்டில் இந்திய விளையாட்டு ஆணையத்தின் மண்டல மையத்தை அமைத்தல் (ஆ) ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்துதல் (இ) தமிழ்நாட்டில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விளையாட்டுகள் மற்றும் நிகழ்வுகளை நடத்துதல் 

4. போக்குவரத்து துறை இராமேஸ்வரம் முதல் தனுஷ்கோடி வரை புதிய அகல இரயில் பாதை அமைக்கும் திட்டத்தை கைவிடுதல்

 5. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சாதிபட்டியலில் 'ன் (N)' , ' க(GA)' .'ட(DA)', "க(KA)' என முடிவடையும் பெயர்களை ர் R" என மாற்ற கோருதல். 

6.எரிசக்தி தமிழ்நாடு கடற்கரையில் கடலோர காற்றாலைகள் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI)

 7. சுங்க கட்டணம் வசூலிப்பதில் உள்ள முரண்பாடுகள். கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை 

8. பாக்வளைகுடா பகுதிகளில் மீனவர்களின் பாரம்பரிய மீன் பிடி உரிமைகளை பாதுகாத்தல் மற்றும் அவர்களின் பாதுகாப்பினை உறுதிசெய்தல் 

9. இலங்கைத் தமிழர்கள் விவகாரம் ஈழத் தமிழர்களுக்கு சமமான குடிமுறை மற்றும் அரசியல் உரிமைகள் அளிப்பது தொடர்பாக. 

1. திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் ஒன்றிய அரசும் தமிழ்நாடு அரசும் 50:50 என்ற சதவீதப் பங்களிப்பு அடிப்படையில் ஒப்புதல் சென்னை மெட்ரோ இரயில் திட்டம் - கட்டம்-II ஐ, கட்டம் -1 ஐ செயல்படுத்தியதைப் போல் ஒன்றிய அரசும் தமிழ்நாடு அரசும் 50:50 என்ற சமவீதப் பங்களிப்புடன் செயல்படுத்துவதற்கான ஒப்புதலை வழங்குவதற்கு  விரைவில்ஆவன செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

2. தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை 

1. விமான நிலைய விரிவாக்கத்திற்கான பாதுகாப்புத்துறை இலவசமாக வழங்குதல் நிலங்களை இந்திய அரசின் கீழ் செயல்படும் நிறுவனங்களுக்கு சொந்தமான நிலங்கள் நிலைய மற்றும் பாதுகாப்புத்துறை நிலங்கள் ஆகியவற்றை விமான செயல்பாட்டிற்காக இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு இலவசமாகவழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். விமான நிலைய விரிவாக்கம் / நவீனமயமாக்கல் பணிகளுக்கு தேவைப்படும் பாதுகாப்புத்துறை நிலங்களின் முக்கியத்துவம் மற்றும் அவசர தேவையை கருத்தில் கொண்டு இந்நேர்விற்கு அதிக முன்னுரிமை அளிக்கப்பட்டு அவசர தீர்வுகாண வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.

2. காலணி உற்பத்திக்கான புதிய உற்பத்தி சார்ந்த ஊக்கச் சலுகை திட்டம் (PLI)

தோல் மற்றும் தோல் அல்லாத காலணி உற்பத்திக்கான விரிவான உற்பத்தி சார்ந்த ஊக்கச்சலுகை திட்டத்தை இந்திய அரசு அறிமுகப்படுத்த வேண்டப்படுகிறது. இது தற்போதுள்ள உற்பத்தியாளர்களின் உற்பத்தித்திறனை அதிகரிப்பதோடு, காலணி ஏற்றுமதியாளர்களுக்கு மிகவும் உகந்த இடமாக இந்தியாவை உருவாக்கும். மேலும், உற்பத்தி சார்ந்த ஊக்கச் சலுகைத் திட்டம், ஆபரணங்கள், ஜிப்பர்கள், காலணியின் அடிப்பகுதிகள், கொக்கிகள் மற்றும் அலங்கார பொருட்கள் போன்ற உள்ளீட்டுப் பொருட்களுக்கான இறக்குமதி மாற்றீடு செய்ய உதவும். எனவே, காலணி உற்பத்திக்கான புதிய உற்பத்தி சார்ந்த ஊக்கச் சலுகை திட்டத்தை செயல்படுத்த கேட்டுக் கொள்ளப்படுகிறது.

3. பி.எம். மித்ரா பூங்காவின் முதன்மை மேம்பாட்டாளராக சிப்காட்டினை நியமித்தல்,

சிப்காட் தன்னகத்தே நிலத்தின் உரிமையினை வைத்துள்ளதாலும், தொழிற்பூங்காக்களை நிர்வகிப்பதில் தனது செயல்திறனை நிரூபித்ததாலும், சிப்காட் -ஐ தமிழ்நாட்டில் உள்ள பி.எம். மித்ரா பூங்காவினை நிர்வகிக்க ஒன்றிய அரசு அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது. அவ்வாறு நிர்வகிக்க அனுமதிக்கப்படுவது திட்ட வழிகாட்டியிலும் ஏற்கனவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

3.இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை

(அ) தமிழ்நாட்டில் இந்திய மையத்தை அமைத்தல் விளையாட்டுஆணையத்தின்மண்டலசென்னையிலுள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழக (TNPESU) வளாகத்தில் இந்திய விளையாட்டு ஆணையத்தின் மண்டல மையத்தை நிறுவுவதற்கான கருத்துரு ஏற்கனவே உள்ளது. தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக் கழகத்தில் அமையவுள்ள இந்த மண்டல மையம், சிறந்து விளங்கும் விளையாட்டு கல்வியுடன் கைகோர்த்து செல்லும் ஒரு முன்மாதிரி மையமாக அமையும். எனவே, அங்கு இந்திய விளையாட்டு ஆணையத்தின் மண்டல மையத்தை அமைத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது.

(ஆ) ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்துதல்

ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆசிய கடற்கரை விளையாட்டு. பல்வகை விளையாட்டு நிகழ்வுகளுள் மூன்றாவது பெரிய ஆசிய பல்வகை விளையாட்டு நிகழ்வு ஆகும். ஐந்து நாடுகள் (இந்தோனேசியா, ஓமன், சீனா, தாய்லாந்து மற்றும் வியட்நாம்) மட்டுமே ஆசிய கடற்கரை விளையாட்டுகளை நடத்தியுள்ளது. மேலும், நாற்பத்தைந்து நாடுகள் இந்த விளையாட்டுகளில் பங்கேற்றுள்ளன.

இந்த நிகழ்ச்சியை இந்தியா இதுவரை நடத்தியதில்லை. தமிழ்நாடு 1076 கிலோமீட்டர் நீளமுள்ள கடற்கரையைக் கொண்டுள்ளது. இது இந்தியாவின் மொத்த கடற்கரை நீளத்தில் 15% ஆகும். கடற்கரை கைப்பந்து விளையாட்டில் மிகுந்த ஆர்வத்துடன் உள்ள தமிழ்நாடு. 2022 இல் சென்னையில் தேசிய விளையாட்டுப் போட்டியையும் நடத்தியது. இதனை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் விதமாக தமிழ்நாட்டில் ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளை நடத்திட அனுமதி வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

(இ) தமிழ்நாட்டில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விளையாட்டுகள் மற்றும் நிகழ்வுகளை நடத்துதல்

சர்வதேச பல்வகை விளையாட்டு போட்டிகளை நடத்துவதற்கான தமிழ்நாட்டின் தொலைநோக்குப் பார்வையைக் கருத்தில் கொண்டு, அடுத்த கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு தனது விருப்பத்தை தெரிவித்துக் கொள்கிறது.

4.போக்குவரத்து துறை இராமேஸ்வரம் முதல் தனுஷ்கோடி வரை புதிய அகல இரயில் பாதை அமைக்கும் திட்டத்தை கைவிடுதல் தெற்கு ரயில்வேயின் கோரிக்கையின் அடிப்படையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம் மற்றும் தனுஸ்கோடி இடையே புதிய அகல இரயில் பாதை அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்துதல் மற்றும் நில உரிமை மாற்றம் செய்வதற்கான செயல்முறையைத் தொடங்குவதற்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது. இருப்பினும், இராமேஸ்வரம் - தனுஸ்கோடி இடையே புதிய இரயில் பாதை அமையும் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை அமையும் பகுதி குறுக்கிடுவதால், நிலம் கையகப்படுத்துவதற்கான 3(2) அறிவிப்பின் செயல்முறை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. 43.82 ஹெக்டேர் அரசு நிலம் மற்றும் 28.61 ஹெக்டேர் வனப்பகுதி நிலத்தினை நில உரிமை மாற்றம் செய்த பின்பே, இத்திட்டத்தின் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என தெற்கு இரயில்வே மீண்டும் வலியுறுத்தியுள்ளது. அப்பகுதியின் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தில் (eco sensitive zone) உள்ள பலவீனமான சுற்றுச்சூழல் அமைப்பைக் கருத்தில் கொண்டு. புதிய இரயில் பாதை அமைப்பதற்கு இந்தப் பகுதி பொருத்தமானது அல்ல என்று தமிழ்நாடு அரசு கருதுகிறது. எனவே, இத்திட்டத்தினை மறுபரிசீலனை செய்யலாம் அல்லது சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்த நிபுணர்களின் உள்ளீடுகளின் அடிப்படையில் இந்தத் திட்டத்தினை பகுப்பாய்வு செய்யலாம் அல்லது இந்தத் திட்டத்தின் நிலையற்ற தன்மையின் காரணமாக கைவிடலாம் என்று கேட்டுக் கொள்கிறோம். 

5. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சாதிபட்டியலில் 'ன் (N)' , ' க(GA)' ,'ட(DA)', "க(KA)' என முடிவடையும் பெயர்களை " ர் R" என மாற்ற கோருதல், தமிழ்நாட்டில் பட்டியலில் உள்ள ஆதிதிராவிடர் சாதி பெயரில் இறுதி மற்றும் பழங்குடியினர் முடிவடையும் எழுத்தில் 5"oor In" " க ka" என்பதற்குப் பதிலாக R ர்" என பெயர் மாற்றம் செய்து மக்களுக்கு மதிப்பு மற்றும் மரியாதை கிடைக்கும் வண்ணம் உரியசட்டம் இயற்ற, விரைவில் நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது

6.எரிசக்தி துறை

தமிழ்நாடு கடற்கரையில் கடலோர காற்றாலைகள் தமிழ்நாடு கடற்கரையில் மிகப்பெரிய மின்திட்டங்கள் ஆய்வறிக்கையில் சாத்தியகூறுகள் அமைப்பதற்கான அதிகப்பட்சமாக கண்டறியப்பட்டுள்ளன. வளங்கள் 31 அளவிலான உள்ளன. ஜிகாவாட் மேலும் காற்றாலை ஆரம்பக்கட்ட அமைப்பதற்கான இராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களின் கடற்கரையோரங்களில் வினாடிக்கு 9 மீட்டர் முதல் 12 மீட்டர் வரையிலான அதிகப்பட்ச காற்றின் வேகம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இவ்வதிகப்படியான காற்றின் வேகம்மின் சாரம் உற்பத்தி செய்வதற்குமிகவும் உகந்ததாக உள்ளது. இவ்வாறு கடலோரக்காற்றாலைகள் மூலம்கிடைக்கப் பெறும் அதிகப்படியான மின்சாரத்தினால் அனல்மின்நிலையம் மூலம் பெறப்படும் மின்சாரத்தினை குறைப்பதற்கு வழிவகை செய்வதுடன் காற்றுமாசினை பெருமளவு குறைத்திட வழிவகை செய்யும். தமிழ்நாடு மீனவர்களையும் கடலோர காற்றாலை மின் திட்டங்கள் அமைக்க ஒருங்கிணைத்து அவர்களைத் தொடர்ந்து இத்திட்டத்தில் பங்கேற்க செய்வதில் தமிழ்நாடு மாநிலத்தின் மிகப்பெரியபங்களிப்பு உள்ளது.

மத்திய மின்துறை அமைச்சகம் தனது 27.05.2013 அன்று வெளியிட்ட அறிவிப்பின்படி மத்திய தொகுப்பிலிருந்து ஒதுக்கப்படும் மின்சாரத்தினை, மின்திட்டங்கள் செயல்படுத்தப்படும் சொந்தமாநிலத்திற்கு 50 விழுக்காடு ஒதுக்கீடு செய்யவழி வகைசெய்கிறது. எனவே அதன் அடிப்படையில் தற்போது தமிழ்நாட்டில் உள்ளநெய்வேலி அனல்மின்நிலைய விரிவாக்க திட்டம்l&ll, புதுநெய்வேலி அனல்மின் திட்டம், மெட்ராஸ் அணுமின் நிலையம், கல்பாக்கம் மற்றும் கூடங்குளம் விழுக்காடுஅளவு அணுமின் நிலையம் ஒதுக்கீடு ஆகிய செய்யப்பட்டுள்ளது. கையாண்டு காற்றாலைகளில் இருந்து திட்டங்களில் 50 இதேவழிமுறையினை பெறப்படும் மொத்த மின்சாரத்தில் 50 விழுக்காட்டினை அதன் சொந்த மாநிலமான தமிழகத்திற்கே ஒதுக்கீடு செய்யுமாறு கேட்டு க்கொள்ளப்படுகிறது. மேலும் கடலோர காற்றாலைகளிலிருந்து பெறப்படும் மின்சாரத்தினை பவர்கிரிட் கார்ப்பரேசன் ஆப் இந்தியா லிமிடெட் (PGCIL) மின்கட்டமைப்பின் வழியேவழங்காமல், மாநிலத்தின்மின் தொடரமைப்பு (STU) கட்டமைப்பின் வழியே வழங்கிட கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

7. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) சுங்க கட்டணம் வசூலிப்பதில் உள்ள முரண்பாடுகள். அ) கப்பலூர் மற்றும் கிருஷ்ணகிரி சுங்கச்சாவடிகளை நகராட்சிக்கு வெளியே மாற்றுதல். கடினப் புருவங்களுடன்கூடிய 2 வழிச்சாலைகளுக்கு சுங்கக்கட்டணம் வசூலிப்பதிலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும். இ) பரனூர் மற்றும் ஆத்தூர் சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் 40 சதவீதமாக குறைக்கப்படவேண்டும். ஈ) 4 வழிச்சாலைக்கான வாகனகொள் திறனை கடந்த சாலைகளில் 6/8 வழிச்சாலையாக மேம்பாலங்கள் / அகலப்படுத்தி தேவைப்படும் இடங்களில் போதுமான வாகன கீழ்ப்பாலங்கள், சேவைச்சாலைகள் அமைக்கும் வரை சுங்கக்கட்டணம் வசூலிப்பதிலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

8. கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை பாக்வளைகுடா பகுதிகளில் மீனவர்களின் பாரம்பரிய மீன் பிடி உரிமைகளை பாதுகாத்தல் மற்றும் அவர்களின் பாதுகாப்பினை உறுதிசெய்தல் சர்வதேச கடல்எல்லைக் கோட்டைத்தாண்டிச் செல்லும் நிகழ்வுகளில் தமிழகமீனவர்கள் இலங்கை கடற்படையினரால் அவர்களது பாரம்பரிய கடற்பரப்பில் மீன்பிடிக்கும் போது அடிக்கடி கைதுசெய்யப்படுகின்றனர். நமது மீனவர்கள் மற்றும் அவர்களது மீன்பிடி படகுகள் இலங்கை அரசால் நீண்டகாலமாக சிறையில் அடைக்கப்படுவது தமிழக மீனவர்கள் மத்தியில் கவலையையும் பாதுகாப்பின்மையையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே, பாக்வளைகுடா பகுதிகளில் மீனவர்களின் பாரம்பரிய மீன் பிடி உரிமைகளை பாதுகாத்து கொள்ளப்படுகிறது.

புதுக்கோட்டை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் வாழும் மீனவர்கள் தங்கள் வாழ்வாதரத்திக்காக நேரடியாக மீன்பிடி தொழிலை நம்பியுள்ளனர். சர்வதேச கடல் எல்லைக்கோட்டைத் தாண்டிச் செல்லும் நிகழ்வுகளில் இலங்கை கடற்படையின் தாக்குதல் மற்றும் தாக்குதலுக்கு வழிவகுக்கும் போது இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை சீர்குலைக்கும்.

எனவே, "கச்சத்தீவை" இந்தியாவிற்கு திரும்பப்பெறுவது மற்றும் பாக்- வளைகுடாபகுதியில் இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை மீட்டெடுப்பது ஆகியவை தமிழ்நாடு அரசின் முதன்மையான குறிக்கோளாக உள்ளது.

எனவே, மீனவர்கள் எதிர்கொள்ளும் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண கச்சத்தீவு மீதான இந்தியாவின் இறையாண்மையை மீட்டெடுப்பதன் மூலமே, பாரம்பரியக் கடற்பரப்பில் மீன்பிடிக்கும் உரிமையை மீட்டெடுக்க முடியும் என்பதை தமிழ்நாடு அரசு மீண்டும் வலியுறுத்துகிறது.

9. இலங்கைத் தமிழர்கள் விவகாரம் ஈழத் தமிழர்களுக்கு சமமான குடிமுறை மற்றும் அரசியல் உரிமைகள் அளிப்பது தொடர்பாக இலங்கை அரசினை வலியுறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.< /p>














Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback