Breaking News

செயற்கைமுறையில் பழுக்கவைக்கப்பட்ட மாம்பழம் கண்டுபிடிப்பது எப்படி எளிய வழிமுறைகள்

அட்மின் மீடியா
0

நாம் மாம்பழம் வாங்கும் போது அது செயற்கையாக பழுக்க வைக்கப்பட்டதா...? எப்படி கண்டுபிடிப்பது


சிறுவர்கள் முதல் முதியோர் வரை விரும்பி உண்ணக்கூடிய மாம்பழத்தில், வைட்டமின் ஏ, சி உள்ளிட்ட அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் நிறைந்து உள்ளது, 

மாம்பழச்சதையில் 15% சர்க்கரை, 1% புரதம், பெருமளவு உயிர்ச்சத்துக்கள் ஏ, பி, சி ஆகியவை உள்ளன. பெரும்பாலான மாம்பழ வகைகள் இனிப்பாக இருப்பினும், சில சற்றே புளிப்பாக இருக்கும். 

முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்தை பிடிக்காதவர்கள் இல்லை என்றே கூறலாம் ,முன்பெல்லாம் விவசாயிகள் மரத்திலேயே பழக்கும் வரை விட்டுப் பறிப்பார்கள் அல்லது காயாக இருக்கும்போதே அதைப் பறித்துத் தனி அறையில் பழுக்க வைப்பார்கள். மாம்பழம் இயற்கையாகப் பழுக்க எத்தலின் என்னும் இரசாயனம் சுரக்கும். அதன்பிறகே அது பழுக்க ஆரம்பிக்கும்.

மாங்காய்கள் இயற்கை யாகப் பழுக்க வைக்க சுமாா் ஒரு வாரம் பிடிக்கும். ஆனால், வியாபாரிகளில் சிலா் மாங்காய்களை 2 நாள்களில் பழுக்க வைக்க ‘கால்சியம் காா்பைடு’ என்ற ரசாயனக் கல்லை பயன்படுத்துகின்றனா்,செயற்கையான முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்களை உண்ணும்போது அவை ஹார்மோன் மாற்றங்களை நிகழ்த்துகின்றன.இதனால் பல உடல் உபாதைகள் வரும் என கூறப்படுகின்றது

எந்தப் பழமும் பளபளப்பாக இருக்க வாய்ப்பில்லை. அப்படி இருக்கும் பழங்களைத் தவிர்த்து விடுவது நல்லது. ஆனால் பஜாரில் மாம்பழங்கள் பல பலவென கிடைக்கின்றது,நீங்கள் வாங்கும் மாம்பழம், கார்பைடு கல்லால் பழுக்க வைத்த மாம்பழமாக இருக்குமோ? என்ற சந்தேகம் ஏற்பட்டால் கண்டுபிடிப்பது எப்படி

இயற்கையாக பழுக்க வைக்கும் முறை 

மாம்பழங்களை காயாக இருக்கும் போதே மரங்களில் இருந்து பறித்து காற்று வெளிச்சம் இல்லாமல் அட்டைபெட்டி, அல்லது அறையில் வைக்கோல் போட்டு அதன் மேல் மாங்காய்களை வைப்பார்கள், பிறகு இரண்டு நாள்கள் கழித்து பார்த்தால் மாம்பழம் அருமையாக பழுத்திருக்கும் கூடுதலாக மணமும் அதிகமாக இருக்கும்.

செயற்க்கையாக கெமிக்கல் முறையில் பழுக்கவைக்கும் முறை:-

இயற்கையாக பழுக்க வேண்டிய மாம்பழத்தை மரங்களில் இருந்து முன்கூட்டியே பறித்து வெள்ளை நிறத்தில் இருக்கும் கால்சியம் கார்பைடு கற்களைத் துணியில் பொட்டலமாக மடித்து மாங்காய் குவியல்களின் நடுவில் போட்டு பழுக்க வைக்கிறார்கள். 

இன்னும் சிலர் கார்பைடு கற்களைப் பொடியாக்கி ஸ்ப்ரே மூலம் மாங்காயின் மீது அடித்து பழுக்க வைக்கிறார்கள்.இம்முறையில் மாம்பழங்கள் 12 முதல் 24 மணி நேரத்துக்குள் பழுத்துவிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்தக் கற்களில் நச்சுத்தன்மை கொண்ட அசிட்டிலின் வாயு உள்ளது. மாம்பழத்தில் உள்ள நீர்ச்சத்துகள் ஆவியாக மாற்ற இந்த வாயு உதவுகிறது. இந்த மாம்பழங்கள் உடலில் பல உபாதைகளை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். 

இராசயன முறையில் பழுக்கப்பட்ட மாம்பழங்கள் கண்டுபிடிக்க சுலபமான வழி

மாம்பழத்தை முகர்ந்து பாருங்கள் மாம்பழம் வாசனையாக இருந்தால் அது இயற்கை வாசனை இல்லையெனில் செயற்கை முறையில் பழுத்த பழம் 

செயற்கை முறையில் பழுத்த பழங்கள் முழுமையாக மஞ்சள் நிறத்தில் இருக்கும் சில இடங்களில் புள்ளிகள் கருகியது போல் இருக்கும். 

இயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் மஞ்சள் நிறமாகவும் இளமஞ்சள் கலந்தும் இருக்கும். 

செயற்கை மாம்பழம் பழுத்ததாக இருந்தாலும் அதன் சதைப்பகுதி கெட்டியாக இருக்கும். இயற்கை பழம் அப்படி இல்லாமல் கொழகொழவென இருக்கும். சதை தோலில் ஒட்டாமல் இருக்கும்.

செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்களை நாம் சாப்பிடும் போது வாயில் அல்லது உதட்டில் எரிச்சல் ஏற்படும். 

இயற்க்கையாக பழுத்த மாம்பழத்தை நறுக்கும்போதே அதன் சாறு ஒழுகும். செயற்கை பழத்தில் சாறு மிகக் குறைவாக வரும் அல்லது வரவே வராது. 

மாம்பழத்தில் குறிப்பிட்ட ஓரிடத்தில் மட்டும் தீப்பட்டதுபோல கறுப்பாக இருந்தால், அது கார்பைட் கல்லால் பழுக்கவைக்கப்பட்டது.

இயற்கையில் காம்புப் பகுதிதான் கடைசியாகப் பழுக்கும். பழம் காம்பை நோக்கித்தான் பழுத்துக்கொண்டு செல்லும். செயற்கையாகப் பழுக்க வைக்கப்பட்டவை அப்படி இருக்காது.

சீசனைத் தாண்டி மற்ற சீசன்களிலும் அந்த பழங்கள் கிடைக்கிறது என்றால் அது நிச்சயம் செயற்கை வேதிப்பொருள்களால் வளர்க்கப்பட்டது 

குறிப்பு:-

மாம்பழங்களை சாப்பிடும் முன்னர் நீரில் 1 மணி நேரம் ஊறவைத்து சாப்பிடுங்கள் இதனால் இரசாயனம் கலந்திருந்தாலும் நீங்கிவிடும். 

மருந்துகள் அதிகம் தோலில் தான் தங்கிவிடும் என்பதால்மாமபழம் தோலை நீக்கி சாப்பிட்டால் எந்த வித பாதிப்பும் வராது

மாங்காய்களை வாங்கி வீட்டிலேயே பழுக்க வைத்து உண்ணுவது சிறந்தது ஆகும்

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback