தெருவில் நாய் துரத்தி காரில் மோதி கீழே விழுந்த 3 பேர் வைரல் வீடியோ
ஒடிசாவின் பெர்ஹாம்பூர் நகரில் தெருநாய்கள் கடித்துவிடும் என்ற அச்சத்தில் பெண் ஒருவர் தனது ஸ்கூட்டியை சாலையோரம் நிறுத்தியிருந்த கார் மீது மோதியுள்ளார். இச்சம்பவத்தில் பெண்கள் மற்றும் குழந்தை இருவரும் பலத்த காயம் அடைந்தனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது
பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோவில் 2 பெண்கள் மற்றும் ஒரு குழந்தை ஸ்கூட்டரில் வரும் போது அவர்களுக்கு பின்னே சில தெருநாய்கள் குரைத்து கொண்டே அவர்களை துரத்தி கொண்டு வருகிறது. இதனால் பதட்டம் அடைந்த அந்த பெண் முன்னாடி இருக்கும் காரை கவனிக்காததால் ஸ்கூட்டர் கார் மீது வேகமாக மோதியது. இதனால், ஸ்கூட்டரில் இருந்த மூன்று பெரும் கீழே விழுகின்றார்கள்
த ெரு நாய்களை கட்டுபடுத்துவது எப்படி:-
தெருநாய்களை கருத்தடை செய்வதன் மூலம் அவற்றின் மக்கள்தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியும். இந்த முறையை அரசு வழங்கும் திட்டம் மூலமாகவோ அல்லது என்ஜிஓக்கள் மூலமாகவோ மேற்கொள்ளலாம்.
தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடுவதால், மனிதர்களுக்கு நோய் பரவாமல் தடுக்கலாம்
தெருநாய்களை தத்தெடுக்க மக்களை ஊக்குவிப்பது தெருக்களில் அவர்களின் மக்கள்தொகையைக் குறைக்க உதவும்.
தெருநாய்களின் பிரச்சினையை கையாள்வதில் மிகவும் பயனுள்ள அணுகுமுறையை உருவாக்க அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு உதவும்.
வீடியோ பார்க்க:-
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ