Breaking News

10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தவறான கேள்விகளுக்கு முழு மதிப்பெண் தேர்வுதுறை அறிவிப்பு

அட்மின் மீடியா
0

ஆங்கில பாடத்தில் 5 மதிப்பெண்கள் போனசாக வழங்க தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.



ஆங்கிலப் பாடத்தில் தவறாக கேட்கப்பட்ட 4 கேள்விகளுக்கு போனஸ் மதிப்பெண்.

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த 6ம் தேதி தொடங்கி 20ம் தேதி அன்று நிறைவு பெற்றது. பத்தாம் வகுப்பு ஆங்கில வினாத்தாளில், ஒரு மதிப்பெண் பிரிவில் 4, 5, 6 ஆகிய கேள்விகள் குழப்பமாக இருந்ததால், அக்கேள்விகளுக்கு மாணவர்களால் முறையாக பதிலளிக்க முடியவில்லை என புகார் எழுந்தது. இதேபோன்று, 28வது கேள்வியும் தவறாக கேட்கப்பட்டிருந்ததால் மாணவர்கள் குழப்பம் அடைந்தனர்,  இதனிடையே 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தவறாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு முழு மதிப்பெண் வழங்கப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

இந்நிலையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆங்கில பாடத்தில் 5 மதிப்பெண்கள் போனசாக வழங்க தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

ஆங்கிலப் பாடத்தில் தவறாக கேட்கப்பட்ட 3 ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கும், ஒரு 2 மதிப்பெண் கேள்விக்கும் முழு மதிப்பெண் வழங்க தேர்வுதுறை உத்தரவிடப்பட்டுள்ளது.

ஒரு மதிப்பெண் கேள்வி எண்கள் 4, 5, 6 மற்றும் 2 மதிப்பெண் கேள்வி எண் 28க்கும் முழு மதிப்பெண் வழங்க தேர்வுதுறை உத்தரவிடப்பட்டுள்ளது 

Tags: கல்வி செய்திகள்

Give Us Your Feedback