Breaking News

இன்புளூயன்சா வைரஸ் என்றால் என்ன? அறிகுறிகள் என்ன? பாதுகாத்துக்கொள்வது எப்படி முழு விவரம் symptoms and treatment of influenza

அட்மின் மீடியா
0

தற்போது நாடு முழுவதும் இன்புளூயன்சா வைரஸ்  பரவலால் சளி, காய்ச்சல் , இருமல் தொற்று பரவி வருகின்றது இதிலிருந்து நாம் நம்மை பாதுகாக்க செய்ய வேண்டியவை செய்ய கூடாதவை குறித்து விரிவாக பார்ப்போம்

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம்(ICMR) நாடு முழுவதும் கடந்த டிசம்பர் 15ஆம் தேதி முதல் இன்ஃப்ளுயன்சா H3N2 ( Influenza A subtype H3N2 ) என்ற வைரஸ் அதிக அளவில் பரவி வருவதாக தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் காய்ச்சல் வந்தால் ஒரு வாரத்திற்கு மேலாக இருமல், சளி, உடல் வலி நீடிக்கும்



இன்ஃபுளுவென்சா வைரஸ் என்பது:-

பொதுவாக கோடை வெயில் காலம் முடிவடைந்து பருவமழை தொடங்கும் காலகட்டத்தில் இந்த 'இன்புளூயன்சா' வைரஸ் தொற்று பரவுவது வழக்கம்.

சளி இருமல் காய்ச்சல் போன்ற நோய்களை உருவாக்கும் இன்ஃபுளுவென்சா எனப்படுவது ஃபுளூ எனப் பொதுவாக அழைக்கப்படும் ஒரு தொற்று நோயாகும். இதில் ஏ வகை, பி வகை, சி வகை, டி வகை என நான்கு வகையான வைரஸ்கள் உள்ளன


இன்ஃபுளுவென்சா வைரஸ் அறிகுறிகள்:-

பொதுவாக வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட இரண்டு நாட்களுக்குப் பின்னர்

அதிக காய்ச்சல்(100 முதல் 103'F),

மூக்கிலிருந்து நீர் வடிதல்,

தொண்டை வலி,

தசை வலி,

தலைவலி,

தொடர் இருமல்

வறட்டு இருமல்

உடல் சோர்வு

அசதி

கைகால் வலி 

போன்றவை பொதுவான அறிகுறிகள் ஆகும். உங்களுக்கு மேற்கண்ட அறிகுறிகள் இருந்தால் மெடிக்கலில்  தயவு செய்து யாரும் மருந்து வாங்கி சாப்பிடவேண்டாம். மருத்துவரை அனுகி சிகிச்சை பெற்று கொள்ளவும்

உடலின் வெப்ப நிலை 102 டிகிரி மேல் தொடர்ந்து இருந்தால் டாக்டரிடம் சென்று உடல் பரிசோதனை செய்வது மிக அவசியம்.

ரத்த பரிசோதனை மூலம் எந்த வகையான காய்ச்சல் தாக்கியிருக்கிறது? என்பதை அறிந்து அதற்கு ஏற்ப சிகிச்சையை எடுத்துக் கொள்ளலாம். 

எப்படி பரவுகின்றது:-

பொதுவாக காற்று வழியாக பரவும் , 

கிருமித் தொற்று ஏற்பட்டவர் இருமும் போதும் அல்லது தும்மும்போதும் வெளிப்படும் நீர்த்திவலைகள் மூலம் நோய்க்கிருமிகள் காற்றில் பரவுகிறது. இந்த நீர்த்திவலைகள் படிந்த பொருள்களை தொடும்போது கைகளில் கிருமி ஒட்டிக் கொள்கிறது. கைகளை கழுவாமல் கண்கள், மூக்கு, வாயைத் தொடும்போது கிருமித் தொற்று ஏற்படுகிறது.

எனவே நோய் தொற்று ஏற்பட்டவர்கள் பிறருக்கு பரவாமல் தடுக்க முகக் கவசம் அணிவது பரவுவதை தடுக்க உதவும்.

ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு காய்ச்சல் வந்தால், அடுத்தடுத்து மற்றவர்களும் பாதிக்கப்படும் நிலை உள்ளது எனவே மற்ரவர்களுக்கும் காய்ச்சல் பாதிக்காமல் இருக்க தற்காப்பு நடவடிக்கைகளை கையாளவும்


சித்தாவில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க

அமுக்கரா சூரணம், நெல்லிக்காய் லேகியம், திரிகடுகு சூரணம், நிலவேம்பு குடிநீர், கபசுர குடிநீர் ஆகியவைகள் எடுத்து கொண்டால் இன்புளூயன்சா வைரஸ் மற்றும் பிற வகை காய்ச்சல்களுக்கு நல்ல பலன் அளிக்கும்


வைரஸ் தொற்றில் இருந்து தற்காத்து கொள்ள:-

கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும். 

அறிகுறி உள்ளவர்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும். 

கூட்டமாக இருக்கும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். 

இருமும் போதும், தும்மும்போதும் வாய், மூக்கைக் கைக்குட்டை அல்லது துணியால் மூடிக்கொள்ள வேண்டும். 

கைகளால் கண் மற்றும் மூக்கை தொடக் கூடாது. 

பொது இடத்தில் எச்சில் துப்பக்கூடாது.

குடிநீரை காய்ச்சி பருக வேண்டும். 

சூடான உணவையே உண்ண வேண்டும். 

நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். நீர்ச்சத்து உள்ள பானங்களை அதிகம் அருந்தலாம்.

இன்புளூயன்சா' காய்ச்சலை தடுப்பதற்கு தடுப்பூசி உள்ளது. இந்த தடுப்பூசியை குழந்தைகள் போட்டுக்கொள்ளலாம்.

மருத்துவர்கள் ஆலோசனை இன்றி ஆன்டியோட்டிக் போன்ற மற்ற மருத்துகளை உட்கொள்ள கூடாது என தெரிவித்துள்ளது.


சிறப்பு முகாம்:-

காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் மாநிலம் முழுவதும் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டிருபபதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்திருக்கிறார். 

நாளை மறுநாள் 10-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தமிழ்நாடு முழுவதும் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை சிறப்பு முகாம்கள் நடைபெற இருக்கின்றன.

காய்ச்சல், இருமல் இருப்பவர்களுக்கு பரிசோதித்து மருந்து மாத்திரைகள் வழங்கப்படும். காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை காய்ச்சல் பாதித்த மக்கள் முகாம்களுக்கு சென்று பயன் அடையலாம்.

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback