Breaking News

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் முழு விவரம் kendriya vidyalaya admission 2023

அட்மின் மீடியா
0

கேந்திரிய வித்யாலயா எனப்படும் KV பள்ளிகளில், மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் பதிவு துவங்குகிறது.






 
KV பள்ளிகளில், ஒன்று முதல், பிளஸ் 2 வரை CBSE பாடதிட்டத்தின் முறையில் படிக்கலாம்.  நடப்பு கல்வி ஆண்டில், ஒன்றாம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் விண்ணப்ப பதிவு பிப்ரவரி 28 ம் தேதி காலை, 10 மணிக்கு துவங்க உள்ளது. 


விண்ணப்பிக்க:-

https://kvsonlineadmission.kvs.gov.in/index.html

என்ற இணையதளம் மூலமாகவும், ஆண்ட்ராய்ட் செல்பேசி செயலி வாயிலாகவும் பதிவு செய்யலாம். இதற்குக் குழந்தைகளின் வயது 6 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். 

மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் RTE  கட்டாய இலவசக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் சேர்க்கப்படும் மாணவர்கள், கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை தற்போது, முதலாம் வகுப்பில் சேர, ஆன்லைன் வழியே விண்ணப்பிக்கலாம்

கேந்திரிய வித்யாலயா பள்ளியின் ஒவ்வொரு வகுப்பிலும் சுமார் 40 மாணவர்கள் வரையில் மட்டுமே சேர்க்கப்படுவர்.  இதில் 25 சதவிகித இடங்கள் கட்டாய இலவச கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் சேர்க்கப்படுகின்றன.  தற்போது வரும் கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பில் மாணவர்கள் சேர மார்ச் 27 முதல் ஏப்ரல் 17 ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

அதேபோல் இரண்டு மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகளுக்கு 03.04.2023 முதல் 12.04.2023 வரை இடங்களின் அடிப்படையில் பதிவு நடைபெறும்.

வயது வரம்பு:-

01/04/2023 அன்று விண்ணப்பதாரர் 6 வயதைக் கடந்திருக்க வேண்டும். அதவாது , விண்ணப்பபதாரர் 1.04.2015 - 1.04.2017க்கு இடையே பிறந்திருக்க வேண்டும். மாற்றுத் திறனாளி குழந்தைகள் நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பை விட 2 ஆண்டுகள் சலுகை பெற தகுதியுடையவர்.

விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்

குழந்தையின் பிறப்பு சான்றிதழ்

வருமான சான்றிதழ்

சாதி சான்றிதழ்

குழந்தையின் புகைப்படம்


விண்ணப்பிக்க கடைசி நாள்:-

17.04.2023 அன்று இரவு 7 மணியுடன்


மேலும் விவரங்களுக்கு:-

https://kvsangathan.nic.in/sites/default/files/hq/Admission_Notice_2023-24.pdf

https://kvsangathan.nic.in/sites/default/files/hq/Admission_Schedule%202023-24.pdf


kvs admission,

kendriya vidyalaya admission

kendriya vidyalaya admission 2023

kendriya vidyalaya admission 2023 24

kv admission 2023

kv admission 2023-24

kvs admission 2023

kvs online admission

kendriya vidyalaya admission form1

kv admission form

Tags: கல்வி செய்திகள்

Give Us Your Feedback