Breaking News

சவூதியில் உம்ரா பயணிகள் சென்ற பேருந்து விபத்தில் பலியானவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் முழு தகவல்

அட்மின் மீடியா
0

சவுதி அரேபியாவில் மக்கா நோக்கிச் சென்ற பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 22 ஹஜ் யாத்ரீகர்கள் பலி, 29 பேர் காயம் என தகவல் வெளியாகியுள்ளது


திங்கள்கிழமை அன்று புனித நகரங்களான மக்காவில் இருந்து மதீனாவுக்கு உமரா யாத்ரீகர்கள் 47 நபர்களை ஏற்றி சென்ற பேருந்து சவூதி அரேபியாவின் தென் பகுதியில் உள்ள ஆசிர் மாகாணத்தில் சென்று கொண்டு இருந்த போது பிரேக் செயலிழந்ததால் பாலத்தில் மோதி கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்து விபத்து ஏற்பட்டது

முதற்கட்ட தகவல்களின்படி, இந்த விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆகவும், மேலும் மொத்த காயமடைந்தவர்களின் எண்ணிக்கை தோராயமாக 29 என கூறப்பட்ட நிலையில் தற்போது அந்த பேருந்து விபத்தில் 22 பேர் உயிரிழந்ததாகவும் அதில் அடையாளம் காணப்பட்ட இறந்தவர்களில் மூன்று பேர் மட்டுமே பிற நாட்டவர்கள், என்றும் மீதமுள்ள 19 உடல்கள் சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளன, 

மேலும் இறந்தவர்களில் 8 பேர் பங்களாதேஷ் சார்ந்தவர்கள் என  அடையாளம் காணப்பட்டதாக பங்களாதேஷ் வெளியுறவு அமைச்சகம் பின்னர் உறுதிப்படுத்தியது.

மேலும் இந்த சம்பவத்தில் காயமடைந்த 18 பேர் பங்களாதேஷை சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக கான்சல் ஜெனரல் தெரிவித்துள்ளார்


Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback