கூகுள்பே மூலம் நடைபெறும் நூதன மோசடி... காவல்துறை எச்சரிக்கை முழு விவரம்
கூகுள் பே மூலம் தற்போது புதிய மோசடி நடைபெறுவதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் எச்சரித்துள்ளார்
இது குறித்து தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்:-
யாரோ ஒருவர் தெரிந்தே உங்கள் கணக்கு அல்லது ஜிபேவுக்கு பணத்தை அனுப்புகிறார். உங்கள் கணக்கில் தவறுதலாக பணம் அனுப்பிவிட்டதாக கூறி பணத்தை திரும்ப அனுப்ப மோசடி நபர் கூறுவார். நீங்கள் பணத்தை திருப்பி அனுப்பினால், உங்கள் கணக்கு ஹேக் செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். .
கூகுள் பேயில் உங்களது கணக்கில் 100 ரூபாயோ 5000 ரூபாயோ தீட்போடலாம். அப்பொழுது நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். நம் கணக்கிற்கு எப்படி இவ்வளவு பணம் வந்தது என்று. அப்பொழுது ஒரு அழைப்பு வரும். இந்த பணத்தை தெரியாமல் போட்டுவிட்டேன் என்று. நான் ஒரு லிங்க் அனுப்புகிறேன். அதில் பணத்தை திருப்பி கொடுங்கள் என்று சொல்வார்கள். யார் லிங்க் அனுப்பினாலும் அதில் எந்த தகவலையும் கொடுக்காதீர்கள்.
உங்களுக்கு ஓடிபி வந்து அதை நீங்கள் சொல்லிவிட்டீர்கள் என்றால் அதை லிங்க் அனுப்பியவர் மொத்தமாக எடுத்துச் சென்று விடுவார்.யாராவது உங்களுக்கு பணம் அனுப்பினாலோ அல்லது வங்கிக் கணக்கில் பணம் போட்டாலோ நீங்கள் அதை சட்டை செய்யாதீர்கள். அந்த நபரை ப்ளாக் செய்யுங்கள். காவல் நிலையத்திற்கு சொல்லுங்கள். அந்த நபர் ஒரு குற்றவாளி. இன்று வீட்டையெல்லாம் உடைத்து திருடுவது கிடையாது. அதற்கான தேவையும் இல்லை. உங்கள் வங்கிகளில் இருக்கும் பணத்தை சர்வ சாதாரணமாக எடுத்து விடுவார்கள்” எனக் கூறப்பட்டுள்ளது
மேலும் யாராவது உங்கள் கணக்கில் தவறாக பணம் அனுப்பினால் காவல்நிலையம் வந்து பணமாக எடுத்து கொள்ளச் செல்லுங்கள் என்று காவல்துறை தெரிவித்துள்ளனர்
Tags: தமிழக செய்திகள் முக்கிய செய்தி