Breaking News

2000 ரூபாய்க்கு மேல் கட்டணம் என்று பரவிய நிலையில் கட்டணம் ஏதும் இல்லை என பேடிஎம் விளக்கம்..! upi 2000

அட்மின் மீடியா
0

யுபிஐக்கான பரிவர்த்தனை கட்டணம் செலுத்த தேவையில்லை என பேடிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது.



முன்னதாக வெளியான தகவலின் படி, ஏப்ரல் 1 முதல் யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) நெட்வொர்க் மூலம் மேற்கொள்ளப்படும் வணிகப் பரிவர்த்தனைகளுக்கான பரிமாற்றக் கட்டணத்தை 1.1% என நிர்ணயித்து என்பிசிஐ சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

யுபிஐ பண பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்கள் எந்தவித கூடுதல் கட்டணமும் செலுத்த தேவையில்லை என்று பேடிஎம் தெரிவித்துள்ளது. 

மேலும் வங்கிக் கணக்கு அல்லது பேடிஎம் வாலட்டில் இருந்து யுபிஐலிருந்து பணம் செலுத்துவதற்கு எந்த வாடிக்கையாளரும் கட்டணம் செலுத்த தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பேடி எம் தனது டிவிட்டர் பக்கத்தில்:-

Regarding NPCI circular on interchange fees & wallet interoperability, no customer will pay any charges on making payments from UPI either from bank account or PPI/Paytm Wallet. Please do not spread misinformation. Mobile payments will continue to drive our economy forward!

தமிழில் :-

பரிமாற்றக் கட்டணம் மற்றும் வாலட் இயங்குதன்மை பற்றிய NPCI சுற்றறிக்கையைப் பொறுத்தவரை, எந்த வாடிக்கையாளரும் வங்கிக் கணக்கு அல்லது PPI/Paytm Wallet இல் இருந்து UPI இலிருந்து பணம் செலுத்துவதற்கு எந்தக் கட்டணத்தையும் செலுத்த மாட்டார்கள். தயவு செய்து தவறான தகவல்களை பரப்ப வேண்டாம். மொபைல் கட்டணங்கள் நமது பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்லும்!

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback