Breaking News

குடும்பதலைவிகளுக்கு மாதம் 1000 யாருக்கெல்லாம் வழங்கப்படும் தமிழக முதல்வர் விளக்கம் Rs 1000 for eligible women

அட்மின் மீடியா
0

திமுக அரசு தனது தேர்தல் அறிக்கையில் முக்கியமாக கூறிய மகளிர் உரிமை தொகை மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் குறித்து நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் செப்டம்பர் மாதம் முதல் இந்த திட்டம் அமலாகும் என அறிவிக்கப்பட்டது.



இந்த திட்டம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் விளக்கம் அளித்தார்.


யாருக்கு ரூ 1000 மகளிர் உரிமைத்தொகை கிடைக்கும் ?

நடை பாதை பெண் வியாபாரிகள், கட்டுமான தொழிலாளர்களுக்கு

மீனவ பெண்கள், சிறு, குறு நிறுவனத்தில் பணியாற்றும் பெண்களுக்கு 

குறைவான ஊதியத்தில் பணிபுரியும் அனைத்து பெண்களுக்கும் 

சிறிய கடைகள், சிறு தொழில் நிறுவனத்தில் சொற்ப ஊதியத்தில் பணிபுரியும் மகளிர், 

குடும்பத்தலைவிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக உரிமைத் தொகை செலுத்தப்படும்!

1 கோடி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 உரிமைத் தொகை வழங்கப்படும்

இந்த திட்டம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் விளக்கம் அளித்தார். அவர் கூறுகையில், 

தேர்தல் அறிக்கையில் குறிப்பிடாத பல உன்னதமான திட்டங்களையும் இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த ஆண்டின் மகத்தமான திட்டமான மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மகளிர் உரிமைத்தொகை குறித்த, வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளிவரும்

வருமான வரித்துறை செலுத்துபவர்களுக்கு உரிமை தொகை கொடுகாலமா என சில பெண்களிடம் கேட்டதற்கு வசதி இல்லாத ஏழை பெண்களுக்கு கொடுத்தால் தான் இத்திட்டம் முழு பயன்பெறும் என கூறினார்கள்.என முதல்வர் குறிப்பிட்ட்டார். 

அனைவர்க்கும் வீடு என்பது வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டி தருவது. முதியோர் உதவி தொகை என்பது ஆதரவற்ற முதியோர்களுக்கு உதவி தொகை , அனைவருக்கும் வேலைவாய்ப்பு என்பது வேலை இல்லாதவர்களுக்கு வேலை இதுதான் திட்டத்தின் செயல்பாடு என முதல்வர் விளக்கம் அளித்தார்.

அடுத்ததாக, தகுதியான பெண்களுக்கு, ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் உரிமை தொகையானது மாதம் 1000 என வங்கி கணக்கில் செலுத்தப்படும், 1கோடி மகளிர் இந்த திட்டம் மூலம் பயன்பெறுவர். இந்த திட்டத்திற்கான வழிமுறைகள் விரைவில் வெளியிடபடும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback