இனி சென்னையில் ஒரே டிக்கெட்டில் ,பஸ், ரயில்,மெட்ரோவில் பயணிக்கலாம் single ticket for travel in Metro, suburban electric train and buses
சென்னை முழுவதும் உள்ள பொது போக்குவரத்திற்கு ஒரே பயணச்சீட்டினை அறிமுகப்படுத்தும் திட்டம் குறித்து முதல்வர் தலைமையில் கடந்த ஆண்டு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
பொதுமக்கள் ஒரே பயணச்சீட்டின் மூலம் பொது போக்குவரத்தான மாநகர பேருந்துகள், சென்னை மெட்ரோ ரயில் , புறநகர் ரயில் என அனைத்திலும் பயணிக்கும் வசதி குறித்தும் ஆலோசனை நடைபெற்றது
ஏற்கனவே மாநகரப் பேருந்தில் பயணிக்க மாநகர் போக்குவரத்து கழகத்தால் சீசன் டிக்கெட் வழங்கப்படுகிறது. அதேபோல், மெட்ரோ ரயிலில் பயணிக்க பயணிகளுக்கு பயண அட்டை வழங்கப்படுகிறது. மேலும் புறநகர் ரயிலில் பயணிக்க குறிப்பிட்ட இடத்தில் இருந்து குறிப்பிட்ட இடத்திற்கு பயணிக்க சீசன் டிக்கெட் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் விரைவில் ஒரே டிக்கெட் முறை அறிமுகம் செய்யப்படும் என சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் தெரிவித்துள்ளது.மேலும் இந்த திட்டத்தை அமல்படுத்துவதற்கான இறுதி கட்ட பணிகள் தொடங்கியுள்ளது. ஒரே டிக்கெட் முறையை சென்னையில் நடைமுறைபடுத்துவதற்காக CENTRE FOR DEVELOPMENT OF ADVANCED COMPUTING நிறுவனத்துடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதனையொட்டி ஒரே டிக்கெட் முறை விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என என எதிர்ப்பாக்கப்படுகின்றது, இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் சென்னைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கும் தினமும் வேலைக்கு செல்பவர்களுக்கும் பயணப்பட மிகவும் எளிமையாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
Tags: தமிழக செய்திகள்