இந்த மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை..! எந்த எந்த மாவட்டங்கள் முழு விவரம்...school holiday tomorrow
சிவராத்திரியை முன்னிட்டு மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு மகா சிவராத்திரி நாளை பிப்ரவரி 18ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் சிவராத்திரி வந்தாலும், மாசிமாதத்தில் வரும் தேய்பிறை சதுர்த்தசி இரவு தான் மகாசிவராத்திரி என்றழைக்கப்படுகிறது.
இதனையொட்டி, திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை ( பிப்-18) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மழையை முன்னிட்டு தொடர் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், அதை ஈடுகட்டும் விதமாக நாளை ( சனிக்கிழமை ) திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் செயல்படும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், நாளை மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.
அதேபோல்
தமிழகத்தில் அரசு பள்ளிகள் கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு பொதுவிடுமுறையை தவிர்த்து உள்ளூர் விடுமுறைகளும் அளிக்கப்படுவதுண்டு. உள்ளூர் விழாக்கள், பண்டிகைகள் பொறுத்து குறிப்பிட்ட மாவட்ட அளவில் இந்த விடுமுறை அளிக்கப்படும். அந்த வகையில் பிப்ரவரி 18ம் தேதி சனிக்கிழமை 3வது சனிக்கிழமை ஆதலால் அரசு பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் அனைத்தும் வழக்கம்போல் செயல்படும்.
கன்னியாகுமரி மாவட்டத்துக்கு சனிக்கிழமை பிப்ரவரி 18ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்துக்கு சனிக்கிழமை பிப்ரவரி 18ம் தேதி உள்ளூா் விடுமுறை அளிக்கப்படுகிறது. அவசிய மற்றும் அவசரத் தேவைகளுக்காக மாவட்ட கருவூலங்கள் குறைவான பணியாளர்களை கொண்டு வழக்கம் போல் செயல்படும். இந்த உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் மார்ச் 25ம் தேதி பணி நாளாக செயல்படும் என அறிவித்துள்ளார்.
Tags: தமிழக செய்திகள்