ஈரோடு இடைத்தேர்தலில் செந்தில் முருகன் போட்டி ஒ.பன்னீர் செல்வம் அறிவிப்பு - panneerselvam announce candidate for Erode
அட்மின் மீடியா
0
ஈரோடு இடைத்தேர்தலில் செந்தில் முருகன் போட்டி ஒ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார், மேலும் பாஜக சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட்டால், அறிவித்த வேட்பாளரை திரும்ப பெறுவோம் எனவும் ஓபிஎஸ்அவர்கள் தெரிவித்துள்ளார்
ஈரோடு
கிழக்கு சட்டசபை தொகுதி எம்எல்ஏவாக காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவெரா
இருந்தார். இவர் கடந்த 4ம் தேதி காலமானார். இதையடுத்து அந்த தொகுதிக்கு
பிப்ரவரி 27 ல் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில்
திமுக
கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக
போட்டியிடுகிறார்.
.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கே.எஸ்.தென்னரசு
போட்டி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
அதேபோல் ஈரோடு இடைத்தேர்தலில் செந்தில் முருகன் போட்டி என ஒ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.
மேலும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தேமுதிக சார்பில் அக்கட்சியின்ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் ஆனந்த் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் நாம்தமிழர் கட்சி வேட்பாளராக
மேனகா போட்டியிடுவதாக கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
அறிவித்துள்ளார்
Panneerselvam fields Senthil murugan as candidate of his outfit in Erode East Assembly bypoll
Tags: அரசியல் செய்திகள்