வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் வாக்களிக்க தேவையான ஆவணங்கள் என்ன என்ன தேர்தல் ஆணையம் அறிவிப்பு election commission released the list
வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் வாக்களிக்க தேவையான ஆவணங்கள் பட்டியல்
இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்:-
நடைபெறவிருக்கின்ற, 98.ஈரோடு (கிழக்கு) சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ள அனைத்து வாக்காளர்களும், அவர்கள் வாக்களிப்பதற்கு முன்னர், வாக்குச்சாவடியில் தங்கள் அடையாளத்தை மெய்ப்பிப்பதற்காக வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை அளிக்கவேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வாக்காளர் புகைப்பட அடையாள
அட்டையை அளிக்க இயலாத அத்தகைய வாக்காளர்கள், அவர்களின் அடையாளத்தை மெய்ப்பிப்பதற்காக, பின்வரும் மாற்று புகைப்பட அடையாள ஆவணங்களில் ஏதேனுமொன்றை ஆணையிட்டுள்ளது. காண்பிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் ஆணையிட்டுள்ளது
i) ஆதார் அட்டை
ii) மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அட்டை;
iii) வங்கி/அஞ்சலக கணக்குப் புத்தகங்கள் (புகைப்படத்துடன் கூடிய) ;
iv) தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு
ஸ்மார்ட் அட்டை; v) ஓட்டுநர் உரிமம்;
vi) நிரந்தர கணக்கு எண் அட்டை (PAN CARD);
vii)தேசிய மக்கள்தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால்வாங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை
viii) இந்திய கடவுச் சீட்டு
ix) புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்
x) மத்திய/ மாநில அரசின் பொதுத் துறை நிறுவனங்களால்/ வரையறுக்கப்பட்ட பொதுநிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள்
xi) பாராளுமன்ற/சட்டமன்ற/சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளஅலுவலக அடையாள அட்டை
xii)இந்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் வழங்கப்டும்தனித்துவமான இயலாமைக்கான அடையாள அட்டை (UDID).
2. வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையால் வாக்காளரின் அடையாளம் மெய்ப்பிக்கப்படுகின்றபோது, வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையிலுள்ள அச்சுப்பிழைகள் / எழுத்துப் பிழைகள் முதலியவற்றை பொருட்படுத்த தேவையில்லை.
ஒரு வாக்காளர் வேறொரு சட்டமன்ற தொகுதியின் வாக்காளர் பதிவு அதிகாரியால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை வைத்திருப்பாரேயானால் அந்த அடையாள அட்டையையும் இந்திய தேர்தல் ஆணையம் காட்டும் ஆவணமாகப் பயன்படுத்தலாம். ஆனால் அந்த வாக்காளருடைய பெயர் அந்த வாக்குச் சாவடிக்குரிய வாக்காளர் பட்டியல் இடம் பெற்றிருக்க வேண்டும்.
வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை அல்லது இந்திய தேர்தல் ஆணையத்தால் வரையறுக்கப்பட்ட மேற்கூறிய எந்த ஒரு அடையாள ஆவணம் வைத்திருப்பதால் மட்டுமே ஒரு வாக்காளர் தனதுவாக்கைச் செலுத்தி விட முடியாது. அவருடைய பெயர் வாக்குச் சாவடிக்கு அனுப்பப்பட்ட வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்தால் மட்டுமே அவர் வாக்குரிமையைச் செலுத்த தகுதியுடையவர் ஆவர்.
3. வாக்காளர் தகவல் சீட்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அச்சிடப்பட்டு வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்பட்ட போதிலும், வாக்காளர் தகவல் சீட்டு அடையாள ஆவணமாக அனுமதிக்கப்படாது.
வாக்காளர்களுக்கு வாக்காளர் தகவல் சீட்டு தனித்த அடையாள ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்படாது என்பதைத் தெளிவுபடுத்துவதற்காக "இந்தச் சீட்டு அடையாளத்தை மெய்ப்பிப்பதற்கான ஆவணமாக வாக்குச் சாவடியில் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை அல்லது ஆணையத்தால் மாற்று ஆவணமாகக் குறிப்பிடப்பட்டுள்ள 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை எடுத்துச் செல்ல வேண்டும்" என்று தடித்த எழுத்துக்களில் வாக்காளர் தகவல் சீட்டில் அச்சிடப்பட்டிருக்கும்.
4. வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்களது அடையாளத்தை மெய்ப்பிப்பதற்காக அசல் இந்திய கடவுச் சீட்டினை மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.
PRESS RELEASE
For the upcoming bye-Elections to Tamil Nadu Legislative Assembly from 98.Erode (East) Assembly Constituency, the Election Commission of India has directed that all electors, who have been issued EPIC have to produce the Elector's Photo Identity Card for their identification at the polling station before casting their votes. Those electors who are not able to produce the EPIC shall produce one of the following alternative photo identity documents for establishing their identity:
(i) Aadhaar Card
(ii)MNREGA job Card
(iii) Passbooks with Banks/Post Office
(iv)photograph issued by Health Insurance Smart Card issued under the scheme of Ministry of Labour
(v)Driving License
(vi) PAN Card
(vii)Smart Card issued by RGI under NPR
(viii) Indian Passport
(ix)Pension document with photograph. (x) Service Identity Cards with photograph issued to employees by Central/ State Govt. PSUs/PublicLimited Companies
(xi)Official identity cards issued to MPs/ MLAs/ MLCS (xii) Unique Disability ID (UDID) Card, M/o Social Justice & Empowerment, Government of India
2. In the case of EPIC, minor discrepancies in the entries therein should be ignored provided the identity of the elector can be established by the EPIC. If an elector produces an Electors Photo Identity Card, which has been issued by the Electoral Registration Officer of another Assembly Constituency, such EPICS shall also be accepted for identification provided the name of that elector finds place in the electoral roll pertaining to the polling station where the elector has turned up for voting. If it is not possible to establish the identity of the elector on account ofmismatch of photograph, etc. the elector shall have to produce one of the alternative photo documents mentioned in para above.
3. The Commission has also directed that while Voter Information Slip will continue to be prepared and issued to electors as part of the awareness building exercise, it will not be permitted as an identifications document. In order to make it clear to the electors that Voter Information Slips shall not be accepted as a stand-alone identification document for voting, the words "THIS SLIP WILL NOT BE ACCEPTED FOR THE PURPOSE OF IDENTIFICATION IN POLLING STATION. YOU ARE REQUIRED ΤΟ CARRY EPIC OR ONE OF THE 12 ALTERNATIVE DOCUMENTS SPECIFIED BY THE COMMISSION FOR VOTING" shall be printed on the Voter Information Slip in bold letters. Voter Information Slips shall continue to be printed.
4. It is also clarified that, the overseas electors shall have to produce theiroriginal passport only for identification.
அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்க:-
http://cms.tn.gov.in/sites/default/files/press_release/pr160223_t_323.pdf
Tags: தமிழக செய்திகள்