Breaking News

இன்று இந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை எந்த மாவட்டம் தெரியுமா

அட்மின் மீடியா
0

 மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் தேர் திருவிழாவை ஒட்டி விழுப்புரம் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் தேர் திருவிழாவை ஒட்டி மாவட்ட ஆட்சியர் பழனி உள்ளூர் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளார்.

செஞ்சியை அடுத்துள்ள மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் தேர் திருவிழா நடைப்பெறுவதையடுத்து, இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசிப்பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த வரும் கடந்த பிப்ரவரி 18 ம் தேதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

பிப்ரவரி 23ம் தேதி வியாழக்கிழமை காலையில் தங்கநிற மரப்பல்லக்கிலும், இரவு யானை வாகனத்தில் சாமி வீதி உலாவும் நடைபெறும் . 

பிப்ரவரி 24ம் தேதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு மேல் 3 மணிக்குள் தேரோட்டமும் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

பிப்ரவரி 25ம் தேதி நாளை சனிக்கிழமை காலையில் தங்கநிற மரப்பல்லக்கிலும், இரவு குதிரை வாகனத்திலும், 

பிப்ரவரி 26ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலையில் தங்க நிற மரப் பல்லக்கிலும் இரவு சத்தாபரணம் என்னும் புஷ்ப பல்லக்கிலும் வீதி உலா நடைபெறும்.

 இதனை கோலாகலமாக கொண்டாடும் வகையில் நாளை ஒரு நாள் மட்டும் பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த விடுமுறையை ஈடுகட்டும் வகையில் மார்ச் 4ம் தேதி சனிக்கிழமை பணி நாளாக செயல்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback