குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 எப்போது வழங்கப்படும் - தமிழக முதல்வர் அதிரடி அறிவிப்பு
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் குடும்பத் தலைவிகளுக்கு விரைவில் ரூ.1,000 வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்
தி.மு.க அளித்த தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். என்றும் குடும்பத் தலைவிகளுக்கு, 1000 ரூபாய் வழங்குவது குறித்து மார்ச் மாதம் நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில், இன்று இறுதி தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து, திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இறுதி தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமை தொகை வழங்கும் திட்டம் மார்ச் மாதம் மார்ச் மாதம் நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்படும் என தெரிவித்தார். நிதிநிலை சரியாக இருந்திருந்தால் பெண்களுக்கான உரிமைத்தொகை வழங்கப்பட்டிருக்கும் என்றும் நிதிநிலை சரியாக இல்லாததால் அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது எனவும் மகளிர் உரிமைத்தொகை குறித்து நீங்களே மறந்தாலும் நான் மறக்கமாட்டேன் எனவும் குறிப்பிட்டார்.
Tags: தமிழக செய்திகள்