Breaking News

அனுமதியின்றி ரஜினியின் பெயர், குரல் ..புகைப்படத்தை பயன்படுத்த கூடாது மீறினால் நடவடிக்கை: வழக்கறிஞர் அறிவிப்பு Superstar Rajinikanth issues public notice

அட்மின் மீடியா
0

நடிகர் ரஜினிகாந்தின் பெயர், குரல், புகைப்படம் ஆகியவற்றை அனுமதியின்றி பயன்படுத்தக் கூடாது. அப்படி பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும்' என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.




இது குறித்து நடிகர் ரஜினிகாந்தின் வழக்கறிஞர் இளம்பாரதி வெளியிட்டுள்ள அறிவிப்பில்:-

ரஜினிகாந்திற்கு இருக்கும் நற்பெயர், அவருடைய ஆளுமைக்கும் சேதம் ஏற்படுத்தும் விதமாக ரஜினிகாந்தின் பெயர், குரல், புகைப்படம், கேலிச்சித்திர படம் உள்ளிட்டவற்றை பல்வேறு நிறுவனங்கள் தவறாக பயன்படுத்துவது தங்களுடைய கவனத்திற்கு வந்துள்ளது. அவர் அங்கீகரிக்காமல் அவரது புகைப்படங்களை பயன்படுத்துவது மக்களிடம் குழப்பத்தையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தும் ஒன்றாகும். 

நடிகர் ரஜினிகாந்தின் பெயர், புகைப்படம் மற்றும் குரலை அவரது ஒப்புதல் இல்லாமல் வர்த்தக ரீதியில் பயன்படுத்துவோருக்கு எதிராக குற்றவியல் மற்றும் உரிமையியல் நடவடிக்கை எடுக்கப்படும் என வழக்கறிஞர் இளம்பாரதி பொது நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.


Superstar Rajinikanth issues public notice

voice images should not be used without permission actor rajinikanth

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback