காபாவில் முதல்முறையாக பெய்த பனி மழை என பரவும் வீடியோ உண்மை என்ன? snowfall in Mecca is not real
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் இஸ்லாமியர்களின் புனித தளமான மெக்காவில் பனி மழை பெய்து வருகின்றது என்று ஒரு வீடியோவை ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
உண்மை என்ன? முழு விவரம்:-
பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ பொய்யானது என சவூதி அரசின் சவூதி கெசட் செய்தி வெளியிட்டுள்ளது, மேலும் அந்த வீடியோ கிராபிக்ஸ் செய்து எடிட் செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
அதே போல் பலரும் ஷேர் செய்யும் வீடியோ குறித்து சவுதி அரேபியாவின் தேசிய வானிலை ஆய்வு மையத்தின் (NCM) அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் ஹுசைன் அல்-கஹ்தானி அவர்கள் தனது டிவிட்டரில் அந்த வீடியோ பொய்யானது என தெரிவித்துள்ளார்
முடிவு:-
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
https://twitter.com/Saudi_Gazette/status/1609582582664167424
No snowfall in Mecca,
Fake Mecca Snow Fall Video Viral
Snowfall in Makkah's Grand Mosque?
Tags: FACT CHECK மறுப்பு செய்தி