Breaking News

அமைச்சராக பொறுப்பேற்றார் உதயநிதி ஸ்டாலின் Udhayanidhi Stalin

அட்மின் மீடியா
0

தமிழக அமைச்சரவையில் 35வது அமைச்சராக பதவியேற்றார் உதயநிதி ஸ்டாலின்ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்


தமிழக அமைச்சராக சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் இன்று பதவியேற்று உள்ளார். சென்னை ஆளுநர் மாளிகையில் ஆர்.என்.ரவி, உதயநிதி ஸ்டாலினுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்



அவருக்கு இளைஞர் நலன், மற்றும் 
விளையாட்டு மேம்மாட்டுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது

அமைச்சராக பொறுப்பேற்ற பின் பேசிய உதயநிதி ஸ்டாலின், பதவியாக கருதாமல் பொறுப்பாக உணர்ந்து என்றும் பணியாற்றிடுவேன். எப்போதும் வழிநடத்தும் முதலமைச்சரிடம், சமூகநீதி திட்டங்களை செயல்படுத்தி தமிழர் நலன் காக்கும் திராவிட மாடல் அரசின் அமைச்சரவையில் பங்கேற்க வாய்ப்பளித்ததற்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள்

கமல் தயாரிப்பில் உருவாக இருந்த படத்திலிருந்து விலகிவிட்டேன். தற்போது நடித்து வரும் மாமன்னன் படம்தான் நான் நடிக்கும் கடைசி படம் என்று தெரிவித்துள்ளார் 

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback