கரையை கடந்தது மாண்டஸ் புயல் வானிலை ஆய்வு மையம் அதிகாரபூர்வ அறிவிப்பு mandous cyclone Live update
கரையை கடந்தது மாண்டஸ் புயல் வானிலை ஆய்வு மையம் அதிகாரபூர்வ அறிவிப்பு mandous cyclone update
கடந்த 06.ம்தேதி தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, மேலும் 7 ம்தேதி காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெற்று தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டது. இது மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து 8 ம்தேதி புயலாக மாறியது இந்த புயலுக்கு மாண்டஸ் என பெயரிடப்பட்டது
மேலும் இந்த மாண்டஸ் புயல் 09 தேதி காலை அதிதீவிர புயலாக மாறியது இதனால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்தது
மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது . பல்கலைக்கழக, தொழில்நுட்ப தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. பேருந்து, ரயில், விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவசியமின்றி வீட்டை விட்டு வெளியில் வந்து நீர்நிலைகள், மரங்கள் அருகே நின்று செல்பி எடுப்பதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாண்டஸ் புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து 9ம் தேதி நள்ளிரவு - அல்லது 10 ம் தேதி அதிகாலை இடைப்பட்ட நேரத்தில் மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.இதனால்
செங்கல்பட்டு, விழுப்புரம், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
அதே நேரத்தில் இன்று சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தி.மலை, கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
மேலும் தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, காரைக்கால், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
9 ம்தேதி இரவு சுமார் 10.30 மணியளவில் மாமல்லபுரத்தில் இருந்து 60 கி.மீ. தொலைவில் புயல் மையம் கொண்டிருந்தது மாண்டஸ் புயல் மணிக்கு 14 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து புயலின் வெளிப்புறப் பகுதி கரையை கடந்துவந்தது
புயல் கரையை கடக்கதுவங்கியவுடன் தரைக் காற்றின் வேகம் பலமாக வீசத் தொடங்கியது. சுமார் 90 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது
அதன்பின்பு அடுத்த ஒரு மணி நேரத்தில் மாண்டஸ் புயலின் கண் பகுதி கரையைக் கடக்கத் தொடங்கியது
அதனை தொடர்ந்து சுமார் 5.30 மனியளவில் புயல் முழுமையாக கரையை கடந்தது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
மாண்டஸ் புயல் எங்கே உள்ளது ? கரையை கடக்கும் பாதை சாட்டிலைட் Live....mandous cyclone
Tags: தமிழக செய்திகள்