தாஜ்மகாலை பார்க்க கொரோனா பரிசோதனை கட்டாயம் அதிரடி அறிவிப்பு Covid tests made mandatory to visit Taj Mahal
சீனா உள்ளிட்ட நாடுகளில் பிஎப்.7 என்ற உருமாறிய கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் உலக அதிசயங்களில் ஒன்றான ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலை பார்வையிட உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தினமும் அதிக அளவில் வருகின்றனர். மேலும் தற்போது குளிர்கால மற்ரும் அரையாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது, இந்நிலையில் சுற்றுலா பயணிகள் வருகைக்கு முன் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆக்ராவில் உள்ள உலக அதிசயங்களில்
ஒன்றான தாஜ்மஹாலை பார்க்க செல்ல வேண்டும் என்றால் கொரோனா பரிசோதனை
நெகட்டிவ் சான்று காண்பித்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவர் என
ஆக்ரா மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட சுகாதாரத் தகவல் அதிகாரி கூறுகையில்:-
புதியவகை கொரானா பிஎப்.7 தொற்றுநோய் பரவாமல் தடுக்க சுகாதாரத் துறை ஏற்கனவே சோதனைகளைத் தொடங்கியுள்ளது. பிஎப்.7 தொற்று எச்சரிக்கையால் பார்வையாளர்கள் அனைவருக்கும் சோதனைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன என்று குறிப்பட்டிருந்தார்
Taj Mahal on Covid alert, no entry for tourists
COVID-19 test mandatory before visiting Taj Mahal
Tags: இந்திய செய்திகள்