Breaking News

குஜராத்தில் மீண்டும் பாஜக ஆட்சி முழு விவரம் Gujarat Result 2022

அட்மின் மீடியா
0

குஜராத் மற்றும் இமாச்சலபிரதேசத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகின்றது


குஜராத்:-

குஜராத்தில் உள்ள 182 சட்டமன்ற தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக நடந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ் ஆம் ஆத்மி கட்சி என்று குஜராத்தில் மும்முனை போட்டி இருந்ததால் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.

மேலும் தனியார் தொலைகாட்சிகள் நடத்திய கருத்துக் கணிப்பு முடிவில் குஜராத்தில் தொடர்ச்சியாக 6வது முறையாக ஆட்சி அமைக்கும் என பெரும்பான்மையான கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2017 சட்டமன்றத் தேர்தலில், பாஜக 99 இடங்களிலும், காங்கிரஸ் 77 இடங்களிலும், பிடிபிக்கு இரண்டு இடங்களும், தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) ஒரு இடமும், சுயேச்சைகளுக்கு மூன்று இடங்களும் கிடைத்தன.

இந்நிலையில் குஜராத்தில் ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கு 92 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும்.ஆனால் பாஜக 150 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகின்றது. இதனால் பாஜக அபார வெற்றி பெற்றுள்ளது

மேலும் குஜராத்  முதலமைச்சராக 2வது முறையக பூபேந்திர படேல் வரும் 12ம் தேதி பதவியேற்ப்பார் என பாஜக அறிவித்துள்ளது.

02.00 மணி நிலவரப்படி:-

2022 சட்ட மன்ற தேர்தல் முன்னனி நிலவரம்

பாஜக:-  157 இடங்களில் முன்னிலை

காங்கிரஸ்:- 18 இடங்களில் முன்னிலை

ஆம் ஆத்மி:- 05 இடங்களில் முன்னிலை

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

Give Us Your Feedback