Breaking News

5 மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல் பாஜகவுக்கு பின்னடைவு 5 state by election results 2022

அட்மின் மீடியா
0

குஜராத், ஹிமாச்சல் ஆகிய சட்டமன்ற தேர்தலுடன் உத்தரபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஒடிசா மற்றும் பிகார் ஆகிய ஐந்து மாநிலங்களில் உள்ள ஆறு சட்டப்பேரவை தொகுதி மற்றும் ஒரு நாடாளுமன்ற தொகுதிக்குமான இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில் 




பிகாரின் குர்ஹானி, சட்டப்பேரவை தொகுதி

சத்தீஸ்கரின் பனுப்ரதாப்பூர், சட்டப்பேரவை தொகுதி

ஒடிசாவின் பாதம்பூர், சட்டப்பேரவை தொகுதி

ராஜஸ்தானின் சர்தார் சாகர் சட்டப்பேரவை தொகுதி

உத்தரப் பிரதேசத்தில் 

ராம்பூர் சதார், சட்டப்பேரவை தொகுதி

கத்துவாலி சட்டப்பேரவை தொகுதி 

மற்றும் மெயின்புரி நாடாளுமன்றத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது.

இதன் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள கத்துவாலி சட்டமன்ற தொகுதியில் ராஷ்டிரிய லோக் தளம் கட்சி முன்னிலையில் உள்ளது

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ராம்பூர் சதார் சட்டமன்ற தொகுதியில்  பாஜக கட்சி முன்னிலையில் உள்ளது

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள  மெயின்புரி நாடாளுமன்ற தொகுதியில்  சமாஜ்வாதி கட்சி முன்னிலையில் உள்ளது

ஒடிசா மாநிலத்தில் உள்ள பதம்பூர்  சட்டமன்ற தொகுதியில் பிஜு ஜனதா தளம் கட்சி முன்னிலையில் உள்ளது

ராஜஸ்தானில் உள்ள சர்தார் சாஹர் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ளது

பீகாரில் உள்ள குர்ஹானி சட்டமன்ற தொகுதியில் பாஜக முன்னிலையில் உள்ளது 

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பனுபிரதப்பூர் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது

உத்திரபிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியின் நிறுவனத் தலைவர் முலாயம் சிங் யாதவின் மறைவை அடுத்து நடைபெற்ற மெயின்புரி நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் அவரது மருமகளும், உத்தரப்பிரதசே முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவின் மனைவியுமான டிம்பிள் யாதவ் போட்டியிட்டுள்ளார்

அதேநேரத்தில்,உத்திரபிரதேசத்தில் இந்த 3 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு மீதான மக்களின் தீர்ப்பாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

Give Us Your Feedback