Breaking News

டிவிட்டரில் கோல்டு, சாம்பல், நீலம் என மூன்று வித VERIFIED TICK கணக்குகள் - எலான் மஸ்க் அறிவிப்பு twitter verified account 3 colour

அட்மின் மீடியா
0

 

உலகின் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றான டுவிட்டர் நிறுவனத்தை சமீபத்தில் எலான் மஸ்க் 44 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கினார்.இந் நிலையில் சமீபத்தில் புளூடிக் பெறுவதற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என எலான் மஸ்க் தெரிவித்திருந்தார்.

அதன் பின்பு மாதம் 8 டாலர் கட்டணத்தில் ப்ளூ டிக் வழங்கும் திட்டத்திலும் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் பல போலிக் கணக்குகள், பிரபலங்கள், நிறுவனங்களின் பெயர்களைப் பயன்படுத்தி ப்ளூ டிக் வாங்கினர்கள், இதனால் பல பிரச்சனைகள் ஏற்பட புளு டிக் கட்டணத்திட்டத்தை நிறுத்தி வைப்பதாக அறிவித்தார்

இந்த நிலையில் தற்போது மூன்று விதமான டிக் கொடுக்கப்படும் என எலான் மஸ்க் அறிவித்துள்ளார். 

தனியார் நிறுவனங்களுக்கு கோல்ட் நிறத்திலும் 

அரசு நிறுவனங்களுக்கு சாம்பல் நிறத்திலும் 

தனிநபர்களுக்கு நீல நிறத்திலும் டிக் வழங்கப்படும் என புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்

Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback