Breaking News

பாஸ்போர்டில் ஒற்றை பெயர் உள்ளவர்களை நாட்டுக்குள் அனுமதிக்க மாட்டோம் ஐக்கிய அரபு அமீரகம் அறிவிப்பு UAE single name in passport

அட்மின் மீடியா
0

 தங்கள் பெயரை ஒற்றை வார்த்தையில் பாஸ்போர்டில் பதிந்திருக்கும் இந்திய பயணிகளுக்கு அமீரகம் தடைவிதித்திருக்கிறது.



ஐக்கிய அரபு அமீரகம் இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா விமான சேவை நிறுவனங்களுக்கு முக்கிய சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிருக்கிறது.அதில், 

இந்தியாவில் இருந்து வரக் கூடிய பயணிகளின் பாஸ்போர்ட்டில் முதல் மற்றும் கடைசி பெயர்கள் (First and Last Name) இல்லாவிட்டால் தங்களது நாட்டுக்குள் அனுமதிக்க மாட்டோம் என ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்திருக்கிறது.

அதாவது பயணிகள் தங்களது பெயருக்கு பின்னால் Surname எனும் தந்தை பெயர் அல்லது குடும்ப பெயர்களை கொண்டிருக்காவிட்டால் அனுமதிக்க முடியாது என்று அறிவித்துள்ளது

மேலும் அமீரகத்தில் குடியுரிமை பெற்றவர்களுக்கு இந்த விதிமுறை இல்லை என்றும் அவர்கள் இதிலிருந்து விலக்கு பெறுகிறார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது


அதாவது இனிமேல், முதல் மற்றும் கடைசி பெயர்கள் இரண்டும் தெளிவாக பாஸ்போர்டில் குறிப்பிட்டவர்கள் மட்டுமே ஐக்கிய அமீரகத்தில் அனுமதிக்கப்படுவார்கள் 

அதாவது ஒருவரின் பெயர்  முஹம்மது ரபீக்  என வைத்து கொள்ளுங்கள். இதில் முஹம்மது என்பது முதல் பெயர்.. ரபீக் என்பது இரண்டாவது பெயர். 

இந்த இரண்டையும் பாஸ்போர்ட்டில் தெளிவாகக் குறிப்பிட்டு இருக்க வேண்டும். 

அதேநேரம் சிலர் அப்துல்லாஹ், ரிஸ்வான்  ஜாபர் என ஒரு வார்த்தை கொண்ட பெயர் இருந்தால் அவர்கள் சர் நேமாக  தங்கள் தந்தை பெயராகப் போடுவார்கள். 

ஆனால், சிலர் அப்படிச் செய்யாமல் தங்கள் பெயரை மட்டுமே முதல் பெயரில் குறிப்பிட்டு பாஸ்போர்ட்  பெற்று இருப்பார்கள்

இவர்களுக்கு இரண்டாம் பெயர் ஆன சர் நேம் என்ற  இடத்தில் காலியாகவே இருக்கும். இதுபோன்ற பாஸ்போர்டுகளை வைத்திருப்பவர்கள் தான் இனி ஐக்கிய அமீரகத்தில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஒற்றைப் பெயர் கொண்டவர்கள் சுற்றுலா மற்றும் வேலை விசாவுக்கு விண்ணப்பித்தால் அவர்களுக்கு விசா தரப்பட மாட்டாது என்றும் பாஸ்போர்ட்டில் முதல் பெயர் மற்றும் இரண்டாவது பெயர் என இரண்டும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும் என்றும் இரண்டு பெயர்கள் இருப்பவர்களுக்கு மட்டுமே விசா கொடுக்கப்படும் என்றும் ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது 



 



UAE flights: Indian consulate issues revised guidelines for passengers with single name in passport

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback