இந்திய ராணுவத்தில் மௌலவி பணிக்கு விண்ணப்பிக்கலாம் முழு விவரம்...indian army imam job
இந்திய ராணுவத்தில் மத போதகர் ஆசிரியர் பணிக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
மௌலவி பணிகள் என்ன:-
படைவீரர்களுக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் மத நல்லிணக்கம் குறித்து போதிப்பது, இறுதி சடங்கில் அவரவர் மத சம்பிரதாயப்படியான சடங்குகளை நடத்துவது, மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ராணுவ வீரர்களுக்கு ஆறுதல் கூறி அவர்களின் மனஉறுதியை மேம்படுத்துவது, தண்டனை வழங்கப்பட்ட ராணுவ வீரர்கள் மனம் திருந்தி வாழ பிரார்த்தனை செய்வது, அதிகாரிகளால் ஏற்பாடு செய்யப்படும் மத போதனை கூட்டம் மற்றும் ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கு மத சம்பந்தமாக போதிப்பது ஆகியவை மத ஆசிரியரின் பணிகளாகும்.
வயது வரம்பு:-
25 வயது முதல் 36 வயது வரை
கல்வித்தகுதி:-
முஸ்லிம் மத ஆசிரியர் பணிக்குரிய Arabic, Adib Alim, Urdu தெரிந்திருக்க வேண்டும் அல்லது Arabic பாடத்தில் Urdu ஐ ஒரு முக்கிய பாடமாக கொண்டு பி.ஏ., பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க:-
https://www.joinindianarmy.nic.in/Authentication.aspx
கடைசி நாள்:-
06.11.2022
மேலும் விவரங்களுக்கு:-
indian army imam job
Tags: வேலைவாய்ப்பு