Breaking News

ஆவின் பாலகம் அமைக்க அரசு மானியம் யாருக்கெல்லாம் தெரியுமா...தமிழக அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த தொழில் முனைவோருக்கு ஆவின் பாலகம் அமைத்துக் கொடுக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.இத்திட்டத்தின் கீழ் மேற்கூறிய சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மொத்தம் ரூ.45 லட்சம் மானியம் வழங்கப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.



அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், ஆதிராவிடர்மற்றும் பழங்குடியினர் நலத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:-

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் எண்ணத்திற்கு உரு கொடுக்கும் வகையில் மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் அவர்கள் விளிம்பு நிலை மக்களுக்கான பொருளாதார முன்னேற்றமே சமூக நீதியாக அமையும் என்பதில் உறுதியான நம்பிக்கையுடன் 2022-2023-ஆம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையின் மீதான விவாதத்தின் போது கீழ்க்கண்ட அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

50 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்திடும் வகையில் உறைவிப்பான் (Freezer) குளிர்விப்பான் (Chiller) போன்ற உபகரணங்கள் கொள்முதல் செய்து ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் ஆவின் பாலகம் அமைத்து வருவாய் ஈட்டிட ரூ.45.00 இலட்சம் மானியம் வழங்கப்படும்.

மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் அவர்களின் 2022-2023-ஆம் ஆண்டிற்கான அறிவிப்பினை நடைமுறைப்படுத்தும் பொருட்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் 

மின் வாகனம் (E-Vehicle), உறைவிப்பான் (Freezer), குளிர்விப்பான் (Cooler) போன்ற உபகரணங்கள் கொள்முதல் செய்து ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் ஆவின் பாலகம் அமைத்து வருவாய் ஈட்டிட, ரூ.45,00,000(ரூபாய் நாற்பத்தைந்து இலட்சம் மட்டும்) மானியம் வழங்க ஏதுவாக, 40 ஆதிதிராவிடர் தொழில் முனைவோர்களுக்கு ரூ.36,00,000 (ரூபாய் முப்பத்தி ஆறு இலட்சம் மட்டும்) மானியமாக ஒன்றிய அரசு நிதியிலிருந்து செலவிட நிருவாக அனுமதி வழங்கியும் மற்றும் 10 பழங்குடியின தொழில் முனைவோர்களுக்கு ரூ. 9,00,000 (ரூபாய் ஒன்பது இலட்சம் மட்டும்) மாநில அரசு நிதியிலிருந்தும் பெற்று வழங்க வழிகாட்டு நெறிமுறைகளின்படி செயல்படுத்துவதற்கு நிருவாக அனுமதி மற்றும் நிதி ஒப்பளிப்பு வழங்கி அரசாணை(நிலை)எண்.95, ஆதி(ம)பந(சிஉதி) துறை, நாள்.21.10.2022-இல் ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

எனவே ஆவின் பாலகம் அமைக்க விருப்பமுள்ளவர்கள், உங்கள்  மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அலுவலகத்தை அணுகுமாறு கேட்டுக்கொள்கின்றோம்


தமிழக அரசு அறிவிப்பை பார்க்க

https://cms.tn.gov.in/sites/default/files/press_release/pr071122_1956.pdf




Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback