6 மாநிலத்தில் நடைபெற்ற 7 தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகள், 4 தொகுதிகளில் பாஜக வெற்றி, முழு விவரம்...bye election results 2022
இந்தியாவில் 6 மாநிலங்களில் உள்ள 7 சட்டப்பேரவை தொகுதிகளில் கடந்த 4 ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது
அதன்படி மகாராஷ்டிராவின் அந்தேரி கிழக்கு, தெலங்கானா மாநிலம் முனுகோடு, பீகாரின் மொகாமா, கோபால்கன்ச், அரியானாவின் ஆதம்பூர், உத்தர பிரதேசத்தின் கோலா கோக்கராநாத், ஒடிசாவின் தாம்நகர் சட்டப்பேரவை தொகுதிகளில் அதற்க்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடந்தது
பிகார் மாநிலம்:-
மோகமா தொகுதியில் 53.45, சதவிகிதம் ஓட்டுகள் பதிவாகி இருந்தது.அதில் நீலம் தேவி (RJD) 79646 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் அவரை எதிர்த்து போட்டியிட்ட பிஜேபி கட்சியை சேர்ந்த சோனம் தேவி 62939 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்
கோபால்கஞ்ச் தொகுதியில் 51.48, சதவிகிதம் ஓட்டுகள் பதிவாகி இருந்தது.அதில்பாஜக கட்சியை சேர்ந்த குசும் தேவி 70032 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் அவரை எதிர்த்து போட்டியிட்ட லல்லுகட்சியின் வேட்பாளர் மோகன் பிரசாத் குப்தா 68243 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்
தெலங்கானா மாநிலம்-
முனுகோட் தொகுதியில் 77.55 சதவிகிதம் ஓட்டுக்கள் பதிவாகி இருந்தது, அதில் சந்திரசேகர் ராவ் கட்சியை சேர்ந்த பிரபாகர் ரெட்டி கூசுகுந்த்லாஎன்பவர் 96551 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜகாவை சேர்ந்த கோமதிரெட்டி ராஜகோபால் ரெட்டி என்பவர் 86545 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்
ஒடிசா மாநிலம்:-
ஒடிசாவின் தாம்நகர் தொகுதியில் 66.63,சதவிகிதம் ஓட்டுக்கள் பதிவாகி இருந்தது அதில் பாஜக கட்சியை சேர்ந்த சூர்யபன்ஷி சுராஜ் என்பவர் 80090 வாக்குகள் பெற்று வெற்றி அடைந்தார் அவரை எதிர்த்து போட்டியிட்ட பிஜூ ஜனதா தள் கட்சியை சேர்ந்த அபந்தி தாஸ் 70288 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்
மகாராஷ்டிரா மாநிலம்:-
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள அந்தேரி கிழக்கு தொகுதியில் 31.74 சதவிகிதம் ஓட்டுகள் பதிவாகி இருந்தது. அதில் சிவசேனாவின் உத்தவ் தாக்கரே தரப்பில் போட்டியிட்ட ருதுஜா ரமேஷ் லட்கே என்பவர் 66247வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்
உத்திரபிரதேசம்:-
கோலா கோக்ரநாத் 55.68, சதவிகிதம் ஓட்டுக்கள் பதிவாகி இருந்தது அதில் பாஜகாவை சேர்ந்த கொக்ரன்னா அமன் கிரி என்பவர் 124810 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் அவரை எதிர்த்து போட்டியிட்ட சமாஜ் வாடி கட்சியை சேர்ந்த வினய் திவாரி என்பவர் 90512 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்
ஹரியானா மாநிலம்:-
ஹரியானாவின் ஆதம்பூர் தொகுதியில் 75.25 சதவிகிதம் ஓட்டுக்கள் பதிவாகி இருந்தது அதில் பாஜகாவை சேர்ந்த பவ்யா பிஷ்னோய் என்பவர் 67376 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜெய் பிரகாஷ் 51662 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.
தேர்தல் ஆணைய அதிகார பூர்வ பக்கம் பார்க்க:-
https://results.eci.gov.in/ResultAcByeNov2022/ConstituencywiseS04101.htm
பாஜக 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது
பீகார் மாநில தொகுதியான கோபால்கஞ்சில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் குசும்தேவி வெற்றி பெற்றுள்ளார்.
அரியானா மாநிலம் ஆதம்பூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் பாவ்யா பிஷ்னோய்யும்,
உத்தரபிரதேசத்தில் கோலாகோகர்நார் தொகுதியில் பாஜக வேட்பாளர் அமன்கிரியும் அபார வெற்றி பெற்றுள்ளனர்.
ஒடிசா மாநிலம் தாம்நகர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக மீண்டும் பெற்றி பெற்றுள்ளது.
மற்ற 3 தொகுதிகள்:-
மகாராஷ்டிராக மாநிலம் அந்தேரி கிழக்கு தொகுதியில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா அணி வேட்பாளர் ருதுஜா லத்கே வெற்றி பெற்றுள்ளார்.
பீகார் மாநிலம் மோகாமா தொகுதியில் ராஷ்டீரிய ஜனதா தள வேட்பாளர் நீலம் தேவி வெற்றி பெற்றுள்ளார்.
தெலுங்கானா மாநிலம் முனுகோட் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆளும் டிஆர்எஸ் கட்சி வேட்பாளர் குஷ்குந்த்லா பிரபாகர் ரெட்டி வெற்றி பெற்றுள்ளார்
bye election results 2022
election commission
election commission of india
Tags: இந்திய செய்திகள்