Breaking News

5 மாவட்ட ரிசார்ட்களில் செயற்கை அருவி சட்டவிரோதம் மீறினால் சீல்.! உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி.! Artificial waterfall illegal Madurai High Court

அட்மின் மீடியா
0

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தை சேர்ந்த வினோத் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில்

தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் குளிக்க தமிழகம் முழுவதும் இருந்து மக்கள் அதிகளவில் வருவது வழக்கம். ஆனால் குற்றாலம் சுற்றுவட்டார பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் ரிசார்ட்டுகளில் இயற்கையான அருவிகளின் நீர்வழிப் பாதையை மாற்றி செயற்கையான அருவிகளுக்கு தண்ணீர் கொண்டுச் செல்கின்றனர். இதனால் இயற்கை சமநிலை பாதிக்கப்படுகிறது. எனவே, குற்றால அருவிகளின் இயற்கை நீரோட்டத்தை மாற்றி செயற்கை அருவிகளை உருவாக்குவோர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்

இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. 

வழக்கை விசாரித்த நீதிபதிகள் இயற்கை அருவிகளின், நீரோட்டத்தை மாற்றி செயற்கையாக அருவிகளை உருவாக்குவது முற்றிலும் சட்டவிரோதமானது. 

இயற்கையான அருவி நீரோட்டத்தை மாற்றி செயற்கையாக நீர்வீழ்ச்சியை உருவாக்குவது சட்டவிரோதமானது வணிக நோக்கத்துடன் இவ்வாறு செயற்கை நீர்வீழ்ச்சி உருவாக்குவது தவறானது இவ்வாறு இருக்கும் செயற்கை நீர்வீழ்ச்சிகளை கண்டறிய தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை, கோவை ,நீலகிரி ஆகிய மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட வேண்டும்.

அந்த குழுவானது, குறிப்பிட்ட மாவட்டங்களில் செயல்படும் தனியார் ரெசார்ட்களில் ஆய்வு செய்து அவ்வாறு செயற்கை நீர்வீழ்ச்சி போன்ற சட்டவிரோத செயல்பாடுகளில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால் அந்த ரிசார்ட்டிற்கு சீல் வைக்க வேண்டும் எனவும் மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இக்குழு செயற்கை அருவிகள் தொடர்பாக ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என உத்தரவிட்டதுடன், வழக்கு விசாரணையை டிசம்பர் 1-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback