Breaking News

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் 46 பேர் பலி 700க்கும் மேற்பட்டோர் காயம் Indonesia Earthquake

அட்மின் மீடியா
0

  இந்தோனேசியாவில் நிலநடுக்கம்

இந்தோனேஷியா நாட்டின் முக்கிய தீவான ஜாவாவில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் 46 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 700க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும்  தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில்  5.4 ஆக பதிவாகியுள்ளது மேலும் இந்த நிலநடுக்கம் தலைநகர் ஜகார்தாவிலும் உணரப்பட்டாலும், சேதமா உயிரிழப்போ ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது

நிலநடுக்கம் ஏற்பட்டவுடன் அச்சமடைந்த மக்கள் அனைவரும் தங்களது குடியிருப்புகளை விட்டு உடனடியாக வெளியேறி சாலைகளிலும், தெருக்களிலும் தஞ்சமடைந்தனர். பலர் திறந்தவெளிகளுக்கும், மைதானங்களுக்கும் பதற்றத்துடன், அலறியடித்துக் கொண்டு ஓடினர். பல அடுக்குமாடி கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாகின. ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

மீட்புப் பணிகள் இப்போது தான் தொடங்கி உள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது

எரிமலைகள் அதிகம் கொண்ட  பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் இந்தோனேசியா இருப்பதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகின்றது

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback