விமானப்படை சாகச நிகழ்ச்சியின் போது 2 விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து லைவ் வீடியோ 2 Planes Crash Mid-Flight During Airshow in Dallas
அமெரிக்காவில் உள்ள டெக்சாஸில் விமானப்படையின் சாகச நிகழ்ச்சியின்போது B-17 ரக 2 போர் விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக முதல்கட்ட தகவல் தெரிவிக்கின்றது
அமெரிக்காவில் உள்ள டெக்சாஸில் உள்ள டல்லாஸ் எக்ஸிகியூட்டிவ் ஏர்போர்ட்டில் நேற்று அமெரிக்க நேரப்படி மதியம் 1.30 மணியளவில் நடந்த ஒரு விமான நிகழ்ச்சியின் போது இராணுவ விமானம் மற்றொரு விமானத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கொடூர விபத்தில் சிக்கிய போர் விமானங்கள் போயிங் பி-17 மற்றும் பெல் பி-63 ரக போர் விமானம் ஆகும்
இந்த B-17 ரக போர் விமானம் என்பது 2ம் உலகப் போரின் போது ஜெர்மனிக்கு எதிரான தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்ட நான்கு எஞ்சின் குண்டுவீச்சு விமானம் ஆகும்.
விமான கன்காட்சியில் ஒரே நேரத்தில் பல விமானங்கள் பறந்து கொண்டிருந்தன. அப்போது எதிர்பாரத விதமாக அப்போது பி-17 ரக விமானத்தின் இறக்கை மற்றும் ஒரு விமானத்தின் மீது வேகமாக மோதியது உடனடியாக அந்த 2 விமானங்களும் தரையில் விழுந்து வெடித்து சிதறியது
இந்த சம்பவம் அனைத்தையும் அங்கு இருந்த பார்வையாளர்கள் எடுத்த் வீடியோவில் பதிவாகி உள்ளது தற்போது அந்த வீடியோ வைரலாகி விருகின்றது
வீடியோ பார்க்க:-
Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ