ஆண் துணை இன்றி பெண்கள் ஹஜ் ,உம்ரா வரலாம் சவூதி அறிவிப்பு Women no longer require male guardians to travel to Saudi Arabia for Hajj
பெண் ஹஜ் யாத்ரீகர்கள் இனி ஹஜ்ஜில் ஆண் பாதுகாவலருடன் செல்ல வேண்டியதில்லை என்று சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளது.
இஸ்லாமியர்களின் ஷரீயத் முறைப்படி பெண்கள் தம் கணவர் அல்லது ரத்த சம்பந்தமான உறவுகளுடன் மட்டுமே வீட்டை விட்டு வெளியில் செல்ல வேண்டும் என உள்ளது. இதை மஹ்ரம் முறை எனக் கூறுகிறார்கள். ஹஜ் யாத்திரை செல்வதில் மட்டும் இந்த மெஹ்ரம் முறையை சவுதி அரசு தவறாமல் கடைப்பிடித்து வந்தது. இந்நிலையில் இந்த மஹ்ரம் முறையை சவுதி அரசு விலகிக் கொண்டது.
கெய்ரோவில்
உள்ள சவுதி அரேபிய தூதரகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது
அமைச்சர் தவ்ஃபிக் பின் ஃபவ்ஸான் அல்-ரபியா அறிவித்தது
மெக்காவில் உள்ள பெரிய மசூதியை விரிவுபடுத்துவதற்கான செலவு ஏற்கனவே கிட்டத்தட்ட 53 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது
ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கான செலவைக் குறைக்கும் நோக்கில் பெண்கள் ஆண் துணையின்றி ஹஜ் வரலாம்
சவுதி அரேபியாவிற்கு வருபவர்கள் எந்த விசாவில் வந்தாலும் உம்ரா செய்யலாம்.
உம்ராவிற்கு வரும் பெண்களுக்கு மகரம் தேவையில்லை
உம்ரா விசா 30 நாட்களில் இருந்து 90 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
உம்ராவிற்கு வருபவர்கள் சவுதி அரேபியாவில் எந்த இடத்திற்கும் செல்லலாம்
அனைவருக்கும் ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கான செலவைக் குறைக்கும் நோக்கில்
அரசு செயற்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்
இஸ்லாமிய பார்வையில்
அறிஞர்களுக்கு மத்தியில் இது தொடர்பாக இரு கருத்துக்கள் நிலவுகின்றன. ஹஜ் செய்யும் அளவுக்கு சக்தி இருந்தால் ஆண்களுக்கு ஹஜ் கடமையாகி விடும். ஆனால் பெண்களைப் பொருத்தவரை கணவன், திருமணம் செய்ய தடுக்கப்பட்ட உறவினர் துணை இருந்தால் தான் ஹஜ் கடமையாகும். இல்லாவிட்டால் கடமையாகாது என்று அதிகமான அறிஞர்கள் கூறுகின்றனர்.
மற்ற பயணங்களுக்குத் தான் பெண்களுக்குத் தக்க ஆண் துணை அவ்சியம். ஹஜ் பயணம் பாதுகாப்பாக இருந்தால் ஆண் துணை இல்லாவிட்டாலும் பெண்கள் ஹஜ் செய்யலாம் என்று மற்றொரு சாரார் கூறுகின்றனர்.
Tags: மார்க்க செய்தி வெளிநாட்டு செய்திகள்