பிரிட்டன் பிரதமரானார் ரிஷி சுனக் முழு விவரம்....Rishi Sunak
மன்னர் மூன்றாம் சார்லஸ் ரிஷி சுனக்கை பிரிட்டிஷ் பிரதமராக நியமினம் செய்து உத்தரவிட்டார்.
பிரிட்டன் நாட்டின் புதிய பிரதமராக இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் தேர்வான நிலையில், இன்று அவரை பிரதமராக நியமித்தார் பிரிட்டன் மன்னர் சார்லஸ்.
பிரிட்டன் நாட்டில் கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சி நடத்தி வரும் நிலையில், நாடு பெரும் பொருளாதார நெருக்கடி எதிர்கொண்டு வருகிறது. சொந்த கட்சியில் அழுத்தம் காரணத்தினால் போரிஸ் ஜான்சன் பதவி விலகியதை அடுத்து உள்கட்சி தேர்தல் நடைபெற்றது. அதில் லிஸ் டிரஸ் மற்றும் ரிஷி சுனக் நின்ற நிலையில், லிஸ் டிரஸ் பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் நிலவும் பொருளாதார சிக்கலை சமாளிக்க முடியாமல் ஆட்சிக்கு வந்து 45 நாட்களிலேயே பிரதமராக பதவியேற்ற லிஸ் டிரஸ் கடந்த 20-ந்தேதி ராஜினாமா செய்தார். பொருளாதார நெருக்கடியை தீர்க்க அவர் எடுத்த நடவடிக்கைகளுக்கு சொந்த கட்சி எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பதவி விலகினார்.
இதையடுத்து புதிய பிரதமரை தேர்வு செய்யும் நடவடிக்கைகள் தொடங்கின. 357 எம்.பி.க்கள் கொண்ட கன்சர்வேடிவ் கட்சியில் ரிஷி சுனக்குக்கு 140-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் ஆதரவு அளித்தனர்.இதற்கிடையே கட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக ரிஷி சுனக் அதிகாரப்பூர்வமாக அறித்தார். ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக ரிஷி சுனக் அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில், பிரிட்டன் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள ரிஷி சுனக் இன்று மன்னர் மூன்றாம் சார்லசை சந்தித்தார். அப்போது அவரை பிரதமராக நியமினம் செய்து, புதிய அரசை அமைக்கும்படி கேட்டுக் கொண்டார்.புதிய பிரதமராக தேர்வான ரிஷி சுனக்குக்கு உலக தலைவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
rishi sunak wife
rishi sunak family
narayana murthy daughter
rishi sunak parents
rishi sunak house
rishi sunak wiki
akshata murthy husband
rishi sunak billionaire
akshatha murthy
akshata murthy wedding
rishi sunak goldman sachs
rishi sunak investment firm
Tags: வெளிநாட்டு செய்திகள்