வங்கியில் கத்தியுடன் வந்த கொள்ளையன் தைரியமாக எதிர்கொண்ட பெண் வங்கி மேலாளர் சிசிடிவி வைரல் வீடியோ rajasthan Female bank Manager bravely
ராஜஸ்தான் மாநிலத்தில் வங்கியை கொள்ளையடிக்க ஆயுதங்களுடன் வந்த கொள்ளையனை தனி ஒரு ஆளாக பெண் மேலாளர் ஒருவர் எதிர்த்து சண்டையிட்ட சிங்கபெண் சம்பவ சிசிடிவி வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தின் ஸ்ரீகங்கனார் பகுதியில் மருதாரா வங்கி செயல்பட்டு வருகிறது. இன்று முகமூடி அணிந்த கொள்ளையன் ஒருவன் வங்கிக்குள் வந்து கத்தியை காட்டி மிரட்டினான்
சத்தம் கேட்டு வங்கி மேலாளர் பூனம் குப்தா எழுந்து வந்து பார்த்தபோது வங்கியில் கொள்ளை முயற்சி நடப்பதை பார்த்துள்ளார்
அப்போது கொள்ளையன் டேபிள் மீது வைத்துவிட்டு அதில் பணம் நிரப்புமாறு கத்தியைக் காட்டி மிரட்ட அப்போது அந்த வங்கியின் மேலாளரான பூனம் குப்தா அந்தக் கொள்ளையனைத் தடுக்க முயற்சித்தார். வங்கி ஊழியர்களும் கொள்ளையனை எதிர்த்து நின்றனர்.
இதனால் ஆத்திரமடைந்த கொள்ளையன், பூனம் குப்தாவுடன் வாக்குவாதம் செய்தபடி அவரைக் கத்தியால் குத்த முயற்சித்தார். கொஞ்சம் கூட அஞ்சாத சிங்கபெண் பூனம் குப்தா கொள்ளையனுக்குப் பதிலடி கொடுக்க முற்பட்டார். எதிர்ப்பு அதிகமாவதை உணர்ந்த கொள்ளையன் அங்கிருந்து தப்பி ஓடினார்.
இந்தச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது வைரல் ஆகின்றது
வங்கி கொள்ளை சம்பவம் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீரா சௌக் காவலர்கள் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். பின்னர் தீவிரமாக விசாரணை நடத்தியதில் 29 வயதான லாவிஷ்தான் இந்த கொள்ளை முயற்சியில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து லாவிஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான
சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
கொள்ளையனை ஆயுதம் ஏதும் இன்றி எதிர்த்து சண்டையிட்ட மேலாளர் பூனம்
குப்தாவிற்கு பலரும் வாழ்த்துக்களை தெரித்து வருகின்றனர்.
வீடியோ பார்க்க:-
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ