ஓடும் ரயில் இருந்து சக பயணியை தள்ளிவிட்ட கொடூரம் வைரல் வீடியோ Howrah to malda intercity Express
அதிவேகமாக ஓடும் ரயிலில் சண்டையிட்டு கொண்ட பயணிகளின் செயல் வீடியோ வெளியாகியுள்ளது.
மேற்குவங்கம்
மாநிலம் ஹவுராவில் இருந்து மால்டா நோக்கிச் செல்லும் இன்டர்சிட்டி
எக்ஸ்பிரஸ் ரயில், பிர்பூம் மாவட்டத்தில் உள்ள தாராபித் சாலை -
ராம்பூர்ஹாட் ரயில் நிலையத்திற்கும் இடையே வந்து கொண்டிருந்தது, அப்போது
அந்த ரயிலின் ஒரு ரயில் பெட்டியில் பயணம் செய்த 2 பயணிகளுக்கு இடையே நடந்த வாக்குவாதம் கைகலப்பாகியுள்ளது அதில் சண்டையிட்டு கொண்ட இருவரில் இளைஞனை ஒருவரை, மற்றொரு பயணி அதிவேகமாக ஓடும் ரயிலில் இருந்து தள்ளி விட்டுள்ளார்
இந்த சம்பவத்தினை ரயிலில் மேல் இறுக்கையில் படுத்திருந்த பயணி ஒருவர் வீடியோ எடுத்துள்ளார் இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது
ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட இளைஞரை ரத்த வெள்ளத்தில் ரயில்வே போலீசார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர், அவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இது தொடர்பாக ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
வீடியோ பார்க்க:-
https://twitter.com/ReporterAaritra/status/1581504185836929029
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ