Breaking News

போன்பே, கூகுள்பே, பேடிஎம் யூஸ் பன்றீங்களா வாடிக்கையாளர்களுக்கு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா எச்சரிக்கை!

அட்மின் மீடியா
0

 போன்பே, கூகுள்பே, பேடிஎம் யூஸ் பன்றீங்களா வாடிக்கையாளர்களுக்கு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா எச்சரிக்கை!

ஆன்லைன் பரிவர்த்தனைகளில் பல்வேறு விதமான மோசடிகள் நடப்பது தொடர்கதையான ஒன்றாக இருந்து வருகின்றது. எஸ்பிஐ அதன் ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளது, அதில் யூபிஐ பரிவர்த்தனை செய்யும்போது இந்த யூபிஐ பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள், எச்சரிக்கையாக இருங்கள் என்று தெரிவித்துள்ளது. 

பாதுகாப்பாக பணம் அனுப்ப எஸ்பிஐ வழங்கிய டிப்ஸ்

நீங்கள் பணத்தைப் பெறும்போது UPI பின்னை உள்ளிட வேண்டியதில்லை என்பதை நினைவில் கொள்ளவும்.

நீங்கள் பணம் அனுப்பும் நபரின் அடையாளத்தை எப்போதும் சரிபார்க்கவும்.

தெரியாத கலக்‌ஷன் கோரிக்கையை நீங்கள் ஏற்க வேண்டாம்.

உங்கள் UPI பின்னை யாருக்கும் ஷேர் செய்ய வேண்டாம்.

QR மேற்கோள் மூலம் பணம் செலுத்தும் போது பயனாளியின் விவரங்களை எப்போதும் சரிபார்க்கவும்.

உங்கள் யூபிஐ பின்னை அடிக்கடி மாற்றவும்.


ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா எச்சரிக்கை! பார்க்க:-

https://twitter.com/TheOfficialSBI/status/1574730719280386048

Tags: தொழில்நுட்பம் முக்கிய செய்தி

Give Us Your Feedback