Breaking News

பூசணிக்காய், தேங்காய்களை சாலையில் உடைக்காதீர்கள் - காவல்துறை வேண்டுகோள்

அட்மின் மீடியா
0

 


ஆயுத பூஜையை முன்னிட்டு வணிக நிறுவனங்கள், கடைகள், வாகனங்கள் போன்றவற்றுக்கு பூஜை செய்து, பூசணிக்காய் உடைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்



சாலைகளின் நடுவே பூசணிக்காய்கள், தேங்காய்களை உடைத்து, அப்படியே விட்டுச் செல்வதால், வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்குகின்றார்கள்

இந்நிலையில், வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் சாலைகளில் பூசணிக்காய், தேங்காய் உடைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் அறிவித்துள்ளார்கள்

பூசணிக்காய்களை சாலைகளில் உடைத்து விபத்து ஏற்பட்டால், விபத்து ஏற்பட காரணமானோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

அதேபோல, புதுச்சேரியிலும், சாலையின் நடுவே பூசணிக்காய் உடைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். சாலைகளில் உடைக்கப்படும் பூசணிக்காயால் ஏதேனும் விபத்து ஏற்பட்டால் அதற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback