Breaking News

தமிழகத்தில் மின் நுகர்வோர் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் அரசானை வெளியிட்ட தமிழக அரசு aadhaar number link to power connection in tamilnadu

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் இலவச மின்சாரம் மானிய மின்சாரம் பெறும் நுகர்வோர்கள் தங்களின் ஆதார் எண்ணை மின் நுகர்வோர் எண்ணுடன் இணைக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து தமிழக அரசு அரசிதழ் வெளியிட்டுள்ளது. 



மானியம் பெறும் அனைத்து மின் நுகர்வோர்களும் தங்களது ஆதார் எண்ணுடன் மின் நுகர்வோர் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது

இலவச மின்சாரத்தில் முறைகேட்டை தடுக்க ஆதார் எண் மின் இணைப்பு எண்ணுடன் இணைக்க முடிவு செய்யப்பட்டது. மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு தமிழக அரசு தற்போது ஒப்புதல் அறிவித்துள்ளது
 
 மின் நுகர்வோருக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. சலுகைகளை பெற விரும்பும் தகுதியான நபர் ஆதார் எண்ணை அளிக்க வேண்டும் என அரசிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 மின் முறைகேட்டை தடுக்க ஆதார் எண் இணைக்கும் பணி துவங்கியுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மேலும் ஆதார் எண் இணைப்பதன் மூலம் மானிய மின்சாரம் முறைகேடாக செல்வதை தடுக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் ஏன் இணைக்கவேண்டும்

 தற்போது தமிழக அரசு 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கி வருகின்றது, அதே சமயம் பலர்  ஒரே வீட்டிற்க்கு தனிதனியாக மின் இணைப்பு வாங்கி அதனை வீடுகளில், மின் மோட்டார், மற்றும் ஏசி,க்கு பயன்படுத்தி மானியத்தை ஏமார்றுகின்றார்கள்

யாரெல்லாம் ஆதார் எண் இனைக்கவேண்டும்

முதல் 100 யூனிட் மின்சாரத்தை இலவசமாக பெரும் 

வீட்டு நுகர்வோர், 

குடிசை நுகர்வோர், 

பொது வழிபாட்டுத்தலங்கள், 

விவசாய பயன்பாடு மின் இணைப்புகள், 

விசைத்தறி, 

கைத்தறி நுகர்வோர்கள் 

என மானியம் பெரும் நுகர்வோர்கள் மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

யாரெல்லாம் ஆதார் எண் இணைக்கத் தேவையில்லை

தொழிற்சாலைகள், 

கடைகள், 

நிறுவனங்கள் 

போன்ற மானியம் பெறாத நுகர்வோர்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க தேவையில்லை

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback