பெங்களூரில் ஓலா, உபேர், ரேப்பிடோ ஆட்டோக்கள்களுக்கு 3 நாட்கள் தடை- கர்நாடக அரசு அறிவிப்பு
பெங்களுரில் Ola, Uber மற்றும் Rapido ஆகிய நிறுவனங்களின் ஆட்டோ சேவைகளை சட்டத்திற்கு புறம்பானது என கர்நாடகா அரசு அறிவித்துள்ளது மேலும் அடுத்த 3 தினங்களுக்கு ஆட்டோ சேவைகளை நிறுத்திக் கொள்ள உத்தரவு
மூன்று நாட்களுக்கு கர்நாடகாவில் ஓலா , உபேர், ரேபிடோ ஆட்டோ ரிக்ஷா சேவைகள் நிறுத்தப்படும் எனவும் ஆட்டோ சேவைகள் "சட்டவிரோதம்" என்று கர்நாடக போக்குவரத்துத் துறை உத்தரவிடப்பட்டுள்ளது
பெங்களூரில் குறைந்தபட்ச ஆட்டோ கட்டணம்முதல் 2 கி.மீட்டருக்கு ரூ.30 ஆகவும், அதன்பிறகு ஒவ்வொரு கிலோமீட்டருக்கு ரூ.15 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அந்த நிறுவனங்களுக்கு மாநில போக்குவரத்து துறை அனுப்பியுள்ள நோட்டீஸில், ஓலா, உபேர், ரெபிடோ ஆட்டோ உள்ளிட்ட ஆப் அடிப்படையிலான கேப் மற்றும் பைக் ஒருங்கிணைப்பாளர்கள் கர்நாடகா மாநில அரசாங்கத்தால் சட்டவிரோதம் என அறிவிக்கப்பட்டு, அடுத்த மூன்று நாட்களுக்கு கர்நாடகாவில் தங்கள் ஆட்டோ சேவைகளை நிறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட வாடிக்கையாளர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவது துறையின் கவனத்திற்கு வந்துள்ளது" என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
போக்குவரத்துத் துறையின் கூற்றுப்படி, ஓலா மற்றும் உபேர் இரண்டு கிலோமீட்டருக்கும் குறைவான தூரம் இருந்தாலும், குறைந்தபட்சம் ரூ. 100 வசூலிப்பது குறித்து பல பயணிகள் போக்குவரத்துத் துறையிடம் பலர் புகார் அளித்துள்ளார்கள் என கூறப்பட்டுள்ளது.
Tags: இந்திய செய்திகள்