Breaking News

கோவை மாநகராட்சியில் அக் 2 ம்தேதி இறைச்சி கடைகளை மூட உத்தரவு!

அட்மின் மீடியா
0

 காந்தி ஜெயந்தி தினத்தன்று கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆடு, மாடு, கோழி இறைச்சி கடைகளை மூட மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக கோவை மாநகராட்சி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், 

2022-ம் ஆண்டு 02.10.2022 அன்று காந்தி ஜெயந்தி தினம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் தமிழக அரசால் ஆடு, மாடு மற்றும் கோழிகளை வதை செய்வதும் இறைச்சிகளை விற்பனை செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது.

எனவே கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, கோழி இறைச்சி மற்றும் பன்றி இறைச்சி கடைகளை மூடும்படி இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. 

அன்றைய தினம் கோயம்புத்தூர் மாநகராட்சியால் செயல்படுத்தப்பட்டு வரும் உக்கடம், சக்தி ரோடு, போத்தனூர் அறுவைமனைகள் மற்றும் துடியலூர் மாநகராட்சி இறைச்சி கடைகள் செயல்படாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த உத்தரவை மீறி செயல்படுவோர் மீது மாநகராட்சி அதிகாரிகளால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் பிரதீப் தெரிவித்துள்ளார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback