15 நாட்களுக்கு ஆர்ப்பாட்டம் நடத்த சென்னையில் தடை காவல்துறை ஆணையர் அறிவிப்பு
அட்மின் மீடியா
0
சென்னை நகரில் பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த 15 நாட்களுக்கு தடை விதித்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுதொடர்பாக, சென்னை நகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில்
சென்னை மாநகரில் பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த 15 நாட்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. இந்த தடை உத்தரவு செப். 30-ம் தேதி (நேற்று) இரவு 11 மணிக்கு தொடங்கி அக்டோபர்15-ம் தேதி இரவு 11 மணி வரை அமலில் இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்
Tags: தமிழக செய்திகள்